Monday , December 16 2019
Home / State-News / ராயல்கேர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…

ராயல்கேர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…

ராயல்கேர் மருத்துவமனையில் உடனுக்குடன் தகவல் பயிமாற்ற வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…

கோவை, நீலம்பூரில் உள்ள ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆம்புலன்ஸ் பயணிக்கும் நோயளிகளை பற்றி மருத்துவ குறிப்புடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை தென் இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகம் மருத்துவமனை வளாகத்தில் துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா துவக்கி வைத்தார்.

விழாவில் போக்குவரத்து துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முடிவில் டாக்டர். பி பாரதம்மன் சேதுபதி நன்றி கூறினார்.

ராயல்கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் அவர் கூறிகையில்:-

இந்த ஆம்புலன்ஸ் நோயாளியின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் கூடிய அனைத்து தயார் நிலையில் இருக்கும். இந்த தகவல் பரிமாற்ற வசதியின் மூலம் இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, இ.சி.ஜி.குறித்து தகவல்கள் உடனுக்குடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்படும்.
மருத்துவமனையின் பிரத்யேக மருத்துவ குழுவானது இந்த தகவல்களின் அடிப்படையில் ஆம்புலன்ஸில் நோயாளியுடன் பணிக்கும் மருத்துவர் மற்றும் செவிலியருக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இந்த அதிநவீன ஆம்புலன்ஸ் வசதியின் மூலம் நேரம் விரயமாவது தவிர்க்கப்பட்டு, சரியான சிகிச்சை வழிமுறைகளும் உடனடியாக கிடைக்கப்பெற்ற, உயிர்ச்சேதம் தவிர்கப்படும் என்றனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia expressnewsruki@gmail.com

About Admin

Check Also

கோவையில் 65 அடி உயரம் 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின் மற்றுமொரு சாதனையை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி நிறுவனம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.