Tuesday , September 25 2018
Home / Tamilnadu Police / ராயப்பேட்டை பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாடிய 32 நபர்கள் கைது.

ராயப்பேட்டை பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாடிய 32 நபர்கள் கைது.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் இது குறித்து தீவிரமாக கண்காணித்தும் சோதனை செய்தும் வருகின்றனர்.

னு-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (07.01.2018) மதியம் சுமார் 01.30 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராயப்பேட்டை, வெஸ்ட் காட் ரோடு, மாடர்ன் டவர்ஸ் 3வது தளத்தில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட செல்வம், வ/54, த/பெ.முனுசாமி, எண்.54, 1/262, பெரியார் நகர், திரிசூலம், சென்னை என்பவர் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.6,432/- மற்றும் சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.