Wednesday , March 20 2019
Home / State-News / மோட்டார் சைக்கிள் தொழில் சங்கம் 13வது ஆண்டு விழா.

மோட்டார் சைக்கிள் தொழில் சங்கம் 13வது ஆண்டு விழா.

மோட்டார் சைக்கிள் தொழில் சங்கம் 13வது ஆண்டு விழாவில்
சிறந்த சமூகசேவையில் ஈடுபட்ட 3 பேருக்கு சாதனையாளர் விருது

கோவை மேற்கு பகுதி மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் தொழிலாளர் சங்கம் மற்றும் கோவை பைக் டெக்னீசியன் டிரஸ்ட் 13 ஆம் முப்பெரும் விழா , ஆண்டு பொதுக்குழு கூட்டம் கணுவாய் கே.என்.ஜி புதூர் பஞ்சாப் அசோசிசன் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல்துறை துணை கமிஷனர் வெங்கடேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் கூட்டமைப்பு மாநில நிறுவனத் தலைவர் பா.குப்புசாமி, ஆதித்யா ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் நிறுவனர் செல்வகுமார், தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.குமாரவேலு, பொருளாளர் ஜமால் முஹம்மது, கௌரவத் தலைவர் அறிவழகன், மாநில ஆலோசகர் பஷீர் அகமது, மாநில துணைத்தலைவர் ஆர். அம்மன்மூர்த்தி, ஆதித்யா அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதில் சங்க
நிர்வாகிகள் ஜி.பி.ராதா, ஜி.பி.சிவா, லோகேஷ், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழ்நாடு மாநில அளவில் சிறப்பாக சமூக சேவை பணி புரிந்த அமீர் அம்ஷா(15 ஆண்டு உடல் அடக்கம்) செந்தில்குமார் ( 10 வருட கால சமூக சேவை ) ஆகியோருக்கு மனித நேய விருதும், கே. பரமக்குடி பஷீர் அகமதுவுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

மாநில துணைத்தலைவர் அம்மன் ஆர் .மூர்த்தி கூறும்போது:- 13வது ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் சங்கத்தில் 670 பேர் உறுப்பினராக உள்ளனர்.

பொதுக்குழு கூட்டம் மாநில சங்கத்துடன் இனைப்பு, அறக்கட்டளை அடிக்கல் நாட்டு கல்வெட்டு மற்றும் பயிற்சி வலைதளம் திறப்பு விழா, உறுப்பினர்கள் புதிய நவீன ஹைடெக் பணிமனை உருவாக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனால் எங்கள் உறுப்பினர்கள் எந்த சந்தேகம் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

சில்லறை பிரச்னைக்காக பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில்லறை பிரச்னைக்காக #மாற்றுத்_திறனாளி பெண்ணை தனியார் பேருந்தில் இருந்து பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.