Tuesday , September 25 2018
Home / Tamilnadu Police / மூன்றாவது திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய நபருக்கு 3 1/2 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

மூன்றாவது திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய நபருக்கு 3 1/2 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

தேனாம்பேட்டையைச் சேர்ந்த சந்தியா, வ/35 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 19.03.2009 அன்று இ-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தனக்கு 2 முறை திருமணமானதை மறைத்து பணத்திற்கு ஆசைப்பட்டு மூன்றாவதாக தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி கூறியிருந்தார். அதன் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குமார் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். மேற்படி குற்றவாளி குமாரை தேனாம்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி கடந்த 22.10.2017 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக 18வது பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இவ்வழக்கின் விசாரணை முடிந்து குற்றவாளி குமார், வ/38, த/பெ.ஆறுமுகம், மூங்கில் துறைப்பட்டு கிராமம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் என்பவருக்கு, நீதிபதி 3 1/2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த இ-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.