Wednesday , August 15 2018
Home / Launch / முடி பிரச்னைகளுக்கு உங்கள் வீட்டு அலமாரிகளிலேயே தீர்வு காணும் வகையில் புரட்சிகர தயாரிப்புகளை டாக்டர் பத்ராஸ் அறிமுகப்படுத்தி அறிவிக்கிறது.

முடி பிரச்னைகளுக்கு உங்கள் வீட்டு அலமாரிகளிலேயே தீர்வு காணும் வகையில் புரட்சிகர தயாரிப்புகளை டாக்டர் பத்ராஸ் அறிமுகப்படுத்தி அறிவிக்கிறது.

Out line Box copy2
சென்னை, மார்ச் 28, 2017: ஹோமியோபதி மற்றும் முடி பாதுகாப்புக்கும் யார் சிறந்தது என்று தேடிப்பார்த்தால் அதற்கு உங்களுக்குக் கிடைக்கும் விடை டாக்டர் பத்ராஸ் தான். கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் துறையில் தடம் பதித்து வரும் இந்த நிறுவனம், சிகிச்சை முறைகளிலும் மற்றும் அதனை அறிவியல் பூர்வமாக அணுகும் செயல்பாடுகளாலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. மேலும், முடி மற்றும் தோல் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வினைத் தரக் கூடிய நம்பிக்கைக்குரிய, வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெற்ற பிராண்டாக விளங்குகிறது. இந்த நிபுணத்துவத்துடன் டாக்டர் பத்ராஸ் நிறுவனம் தேசிய அளவிலான முதல் புரட்சிகரமான தயாரிப்புகளை நேற்று வெளியிட்டது. கொல்கத்தாவில் இந்த தயாரிப்புகளின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. முடி தொடர்பாக அடிக்கடி ஏற்படும் பிரச்னைகளுக்கு உங்கள் வீட்டு அலமாரிலேயே தீர்வுகளைத் தரும் வகையில் இந்த பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பொருள்களும் அதாவது பொடுகுக்கு எதிரான தயாரிப்பு, முடியை பாதுகாக்கும் தயாரிப்பு, முடி உதிர்தலை தடுக்கும் தயாரிப்பு ஆகியன அடங்கிய இந்த புரட்சிகர தயாரிப்புகளின் விலை ரூ.1000 முதல் ரூ.1050 ஆகும். தலைமுடி தொடர்பான அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் அறிவியல் பூர்வமான, பாதுகாப்பான தீர்வினைத் தரும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்புகள் நாடு முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்த புரட்சிகர தயாரிப்பு தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் பத்ராஸ் நிறுவனக் குழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் திரு சந்தீப் சக்சேனா பேசியது:-

Out line Box copy2இந்தியாவில் தலைமுடியை பாதுகாப்பது தொடர்பான பொருள்களை விற்கும் சந்தையின் மதிப்பு ரூ.17,000 முதல் ரூ.18,000 கோடி வரை உள்ளது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான தலைமுடி பாதுகாப்பு பொருள்கள், ஏராளமான தனிப்பட்ட முறையிலான பொருள்கள் இந்த சந்தை விற்பனையில் அடங்கும். இந்த நிலையில், தலைமுடி தொடர்பாக மக்களின் பிரச்னைகளில் இருந்து அவர்கள் தீர்வினை நோக்கும் வகையிலான தனித்துவமான தயாரிப்புகளை நாங்கள் வழங்கவுள்ளோம். இந்தத் தயாரிப்புகள் எங்களது சில்லறை விற்பனை சந்தையில் 30 முதல் 40 சதவீத வளர்ச்சியைத் தரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தலைமுடி பிரச்னை தொடர்பாக எந்தப் பொருள்களையும் வாங்குவதற்கு முன்பாக நன்கு ஆய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த தயாரிப்புகள் டாக்டர் பத்ராஸின் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள், அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். நவீன சில்லறை விற்பனை அங்காடிகள், பலதர தயாரிப்புகளை விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.
Out line Box copy2
ஹோமியோபதி சிகிச்சை முறைகள் மற்றும் இயற்கை தயாரிப்புகளுக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் தேவைகள் குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டார் திரு சந்தீப் சக்சேனா. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சர்வே படி, 90 சதவீத கருதாளர்கள் ஹோமியோபதி சிகிச்சை முறை மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், அதே அளவினர் இயற்கை தயாரிப்புப் பொருள்கள் பாதுகாப்பாகவும், தரமானதாக-திறனுடையதாக, கொடுக்கும் பணத்துக்கு மதிப்பாக இருப்பதாகவும் கருதுகின்றனர். இயற்கை மற்றும் மூலிகை பொருள்களுக்கான வளர்ச்சி நிலையை இதுகாட்டுவதுடன், அதற்கான தேவை அதிகரித்து வருவதையும் உணர்த்துகிறது.

டாக்டர் பத்ராஸின் புதுமுக தயாரிப்புகளானது மார்ச் 31 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும். டாக்டர் பத்ராஸின் பொருள்கள் கிடைக்கும் இடங்கள், மருந்தகங்கள், நவீன சில்லரை விற்பனை கடைகள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவை கிடைக்கும். மேலும், அமேசான் மற்றும் Nyaka ஆகியவற்றிலும் பெற்றுக் கொள்ளலாம்.

டாக்டர் பத்ராஸ் நிறுவன குழுமங்கள் பற்றி….
டாக்டர் பத்ராஸ் ஹெல்த் கேர் குழுமம் கடந்த 1982 ஆம் ஆண்டு மும்பையில் டாக்டர் முகேஷ் பத்ராவால் தொடங்கப்பட்டது. இந்தக் குழுமம் இப்போது முன்னணி ஹோமியோகேர் நிறுவனமாக விளங்குகிறது. லண்டன், துபை, இந்தியாவின் 131 நகரங்கள் என மொத்தம் 227 கிளினிக்குகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. டாக்டர் பத்ராஸின் அழகியில் தீர்வுகள் பிரைவேட் நிறுவனத்தின் சார்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு அழகியல் தொடர்பான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தலையில் முடியை நடுவது, உடல் பருமனுக்குத் தீர்வு போன்ற பல அம்சங்கள் இந்த அழகியல் தீர்வுகள் மூலமாக தரப்படுகிறது.

டாக்டர் பத்ராஸ் பாசிடிவ் ஹெல்த் தயாரிப்புகள் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படும் தனிநபர் மற்றும் ஹெல்த்கேர் தயாரிப்புகள் குறிப்பிட்டத்தக்க வளர்ச்சியும் மேம்பாடும் அடையப்பெற்றுள்ளது. இது தனிப்பட்ட நபர்களின் சிகிச்சைகள் மற்றும் அவர்களை காக்கும் முறைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. டாக்டர் பத்ராஸிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

அவற்றில் 3 லட்சம் பேர் தலைமுடிக்காகவும், 1 லட்சம் பேர் தோல் தொடர்பான சிகிச்சை முறைகளையும் பெற்று வருகின்றனர்.
டாக்டர் பத்ராஸ் சைபர் கிளினிக் (www.drbatras.com) கடந்த 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் லிம்கா புக்ஸ் ஆப் ரிக்காட்ர்ஸில் இடம்பெற்றுள்ளது. சைபர் கிளினிக் முறை மூலம் ஆன்-லைன் வழியே ஒவ்வொரு ஆண்டும் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வருவதால் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. மேலும், உலகின் முதல் டெலி-ஹோமியோபதி சிகிச்சை ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. பிராண்டுகளின் நம்பகத்தன்மை குறித்த 2016 ஆம் ஆண்டின் சர்வே கணக்குப்படி ஹோமியோபதி சிகிச்சை அளிக்கும் பிராண்டுகளில் நம்பர் 1 ஆக விளங்குகிறது. மேலும், பிளான்மேன் மீடியா சார்பில் பவர் பிராண்ட் என்ற சான்றையும் பெற்றுள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஐ.எஸ்.ஓ., 9001-2008 தரச்சான்று பெற்ற ஒரே நிறுவனமாக ஹோமியோபதி ஹெல்த்கேர் நிறுவனம் விளங்குகிறது. இதற்கெல்லாம் மேலாக, அறப்பணிகளைச் செய்யும் வகையில் சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட-சாமானிய மக்களுக்கு இலவசமான மருத்துவ சிகிச்சையை வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

About Ragavendhar

Check Also

Light Matters launches new exclusive showroom in Chennai

Light matters launched its new store at RK Salai, Chennai. Light matters will be a …