Saturday , July 21 2018
Home / Tamilnadu Police / மாதவரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் வாகன சோதனையின் போது கைது. 6 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
Illustration of a police station building on a white background

மாதவரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் வாகன சோதனையின் போது கைது. 6 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

https://sexcompilations.com/busty-hot-swedish-girls-nude/ October 16, 2017 Tamilnadu Police Leave a comment 170 Views

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, எம்-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (15.10.2017) மதியம் மாதவரம் அகர்சன் கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு இரு சக்கர வாகனத்தில் ( பதிவு எண்.டி.என்.04 ஹகு 4696) வேகமாக வந்த நபரை பிடித்த விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும்  விசாரணையில் மேற்படி வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்ததன் பேரில் அவரை கைது செய்து  காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.  விசாரணையில் பிடிப்பட்ட நபரின் பெயர் 1.அஜயன், வ/37, த/பெ.சிவசங்கர நாயர்,  எண்.39, 2 வது லேன், முதல் தெரு, கண்ணாதாசன் நகர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட அஜயன் கடந்த 20.05.2017 அன்று,  மாதவரம், மெஜஸ்டிக் காலனி பகுதியில் வசிக்கும் கோவிந்தசாமியின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 8 சவரன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அஜயனிடமிருந்து 6 சவரன் தங்க நகைகள் மற்றும்  இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்ட அஜயன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்

About Admin

Check Also

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *