Sunday , July 22 2018
Home / Tamilnadu Police / மருத்துவ கல்லூரியில் MBBS சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ. 50 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்கள் கைது .

மருத்துவ கல்லூரியில் MBBS சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ. 50 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்கள் கைது .

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகன், வ/42, த/பெ.துரைசாமி என்பவர் தனது அண்ணன் மகன் பாலாஜி என்பவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் சீட்டு கேட்டு, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெயராம் என்கின்ற ஜெயராமன் மற்றும் மயிலாப்பூரை சேர்ந்த வெங்கட்ரமணா ஆகிய இருவரை அணுகியுள்ளார். மேற்படி இருவரும் ரூ.50 லட்சம் தந்தால் மெடிக்கல் சீட்டு வாங்கி தருவதாக, வேல்முருகனிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய வேல்முருகன் ரூ. 50 லட்சம் பணத்தை மேற்படி இருவரிடமும் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய ஜெயராம் (எ) ஜெயராமன், வெங்கட்ரமணா ஆகிய இருவரும் பாலாஜிக்கு மெடிக்கல் கல்லூரிகளில் மெடிக்கல் சீட்டு கிடைத்தது போல போலியான ஆணைகளை தயார் செய்து கொடுத்து மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக வேல்முருகன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்தியகுற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையில் போலீசார் விசாரணை செய்ததில் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஜெயராம் என்கின்ற ஜெயராமன் மயிலாப்பூரை சேர்ந்த வெங்கட்ரமணா ஆகியோர் மருத்துவ கல்லூரிகளில் மெடிக்கல் சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி போலியான ஆணைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு ரூ. 50 லட்சம் பணத்தை ஏமாற்றியது உண்மையென விசாரணையில் தெரிய வந்தது. அதன் பேரில் மோசடியில் ஈடுபட்ட 1..ஜெயராம் (எ) ஜெயராமன், த/பெ.கோட்டையா, எண்.153, முத்தமிழ் நகர், 3 வது பிளாக்,, கொடுங்கையூர் 2..வெங்கட்ரமணா, வ/38, த/பெ.விட்டல் நாதன், எண்.31, ராஜா தெரு, மைலாப்பூர் ஆகிய இருவரை நேற்று (23.01.2018) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *