Sunday , March 18 2018
Home / Business / மணிடேப் – இந்தியாவின் முதல் செயலி அடிப்படையிலான க்ரெடிட் லைன் இப்போது தமிழில் சென்னை மக்களுக்கான தமிழ் செயலி விரைவில் கோவையிலும் அறிமுகம்

மணிடேப் – இந்தியாவின் முதல் செயலி அடிப்படையிலான க்ரெடிட் லைன் இப்போது தமிழில் சென்னை மக்களுக்கான தமிழ் செயலி விரைவில் கோவையிலும் அறிமுகம்

சென்னை: 2017 டிசம்பர் :  இந்தியாவின் முதல் செயலி அடிப்படையிலான க்ரெடிட் லைன் மணிடேப் இப்போது சென்னை மக்களுக்காகத் தமிழில் அறிமுகமாகி உள்ளது.  வங்கிகளுடன் இணைந்து செயல்படும் மணிடேப் மூலம் இனி வாடிக்கையாளர்கள் செயலியில் உள்ள பொத்தானை அழுத்திய உடனேயே கடன் கிடைக்கும்.  2016 செப்டம்பரில் அறிமுகமான மணிடெப் இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான பயனீட்டாளர்களை ஈர்த்ததுடன்,   சென்னையில் மட்டும் 450% வளர்ச்சியைக் கண்டுள்ளது.  நடப்பு நிதியாண்டுக்குள் ரூ 300 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கவும், கோவையில் அறிமுகப்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.  கடன் அட்டை மற்றும் ரொக்கம் இரண்டையும் செயலி மூலம் பயன்படுத்தும் வசதியைச் சந்தையில் நுகர்வோருக்கு வழங்கும் ஒரே செயலி மணிடேப் மட்டுமே.

சமீபத்தில் கூகிள் மற்றும் கேபிஎம்ஜி இந்தியா ஆகியவை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இணையத்தில் இந்திய மொழிப் பயனீட்டாளர்கள் ஆங்கிலப் பயன்பாட்டை முந்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்தி மற்றும் ஏனைய பிராந்திய மொழிகளுடன் ஒப்பிடுகையில் ஆன்லைன் சேவைகளை அதிக அளவு பயன்படுத்துவோர் தமிழ் பேசும் பயனீட்டாளர்கள் ஆவர்.  2011 மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி சென்னை மக்கள் தொகை 10 மில்லியனுக்கும் அதிகம்  மற்றும் தமிழ் பேசுவோர் 79% ஆகும். இந்தி மற்றும் கன்னட செயலிகள் சமீபத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து. தமிழக உள்ளூர் சந்தையையும், தமிழ் பிரபலமாக உள்ள ஏனைய மாநிலங்களின் சந்தைகளையும் கைப்பற்ற நிறுவனம் ஆவலாக உள்ளது.

எளிதான தகுதிச் செய்முறை மூலம் ரூ 5 லட்சம் வரை தமிழ் பேசும் பயனீட்டாளர்கள் கடன் பெற இந்தச் செயலி அனுமதிக்கும்.  ஆண்ட்ராயிட் ப்ளேஸ்டோரில் (http://bit.ly/moneytap) கிடைக்கும் மணிடேப்பின் இலக்கு மாதம் ரூ 20,000/-க்கு அதிகமாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் சுய வேலை செய்யும் தொழில்முறை நிபுணர்கள் ஆவர். க்ரெடிட் லைனைப் பயன்படுத்தி நுகர்வோர் குறைந்த பட்சம் ரூ 3000/- முதல் ரூ 5 லட்சம் வரை அல்லது அவர்களது அதிகபட்ச தகுதிக்கேற்ப கடன் வாங்கலாம். 2 மாதம் தொடங்கி 3 ஆண்டுகள் வரை மாதாந்திரத் தவணைத் திட்டங்களை நுகர்வோரே தேர்ந்தெடுக்கலாம். கடன் வாங்கிய தொகை மீது மட்டுமே வசூலிக்கப்படும் வட்டி விகிதம் மாதம் 1.08% அளவிற்குக் குறைவாக இருக்கும். பயனீட்டாளர் கடன் வாங்காத நிலையில் வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை.  மாதாந்திரத் தவணைத் திட்டம் மூலம் பணம் செலுத்திய பின்னர் கடன் தொகை மீண்டும் நிறைவு செய்யப்படும்.  விவரப் பட்டியல், பணம் செலுத்திய தொகை உள்ளிட்ட நிதிப் பரிமாற்றங்கள் சம்மந்தப்பட்ட வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழியே மணிடேப் செயல் மூலம் நேரடியாக நிர்வகிக்கப்படும். பாதுகாப்பான ஏபிஐகளை மணிடேப் பயன்படுத்துவதால் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் 100% பாதுகாப்பானது.

விரிவாக்கத் திட்டங்களை வேகப்படுத்த மணிடேப் அடுத்த 6 மாதங்களில் தனது ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தொழில்நுட்பம், தரவு, பொருள், சந்தை, இயக்கம் ஆகிய பிரிவுகள் 50 புதிய குழு உறுப்பினர்களைச் சேர்க்க முடிவெடுத்துள்ளது.  மணி டேப் நுகர்வோரின் ஏனைய பிரிவுகளிலும் கடன் அணுக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் தனது முன்னிலை இடத்தை உறுதிப்படுத்தவும்,  2018 மார்ச்சுக்குள் ஏனைய 6 வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், இந்தியாவின் 50 நகரங்களில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.  பெங்களூரில் இயங்கும் ஸ்டார்ட் ஃப் நிறுவனம் சமீபத்தில் 12.3 மில்லியன் டாலர் நிதியத்தை செக்யோயியா இந்தியா, என்இஏ & ப்ரை வெஞ்சர் பார்ட்னர்ஸ் ஆகியவற்றிடமிருந்து திரட்டி இருக்கிறது.

மணிடேப் சிஇஓ & இணை நிறுவனர் பாலா பார்த்தசாரதி கூறுகையில் ‘சென்னை எங்களது மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றாகும்.  நுகர்வோர் கடன் இந்தியாவில் மிக வேகமாக வளரும் நிலையில், நுகர் கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிராந்திய மொழிகளில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த விரும்பினோம். சென்னையின் 70% பயனீட்டாளர்கள் 26-35 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள். 40 வயதுக்குக் கீழுள்ள நகரத்தின் பெரும்பான்மை இந்தியர்கள் வங்கிக்கு  செல்ல விரும்புவதில்லை.  உணவு, ஆடை, டாக்ஸி ஆகியவற்றைச் சில பொத்தான்களை அழுத்தினாலே கிடைக்கும் போது, சற்றே வித்யாசமாகச் சில நிதிச் சேவைகளையும் அதேபோல் அவர்கள் ஏன் எதிர்பார்க்கக் கூடாது? இதுபோன்று அசத்தலான நுகர்வோர் அனுபவம்; நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப விரைந்து மாற்றம்; கைபேசியை மனதில் வைத்து பெரிய தரவு மற்றும் மேகத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்குவோம்’ என்றார்.

மணிடேப்

 பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான மணிடேப் ஐஐடி / ஐஎஸ்பி முன்னாள் மாணவர்களும், தொழில் முனைவர்களுமான பாலா பார்த்தசாரதி, அனுஜ் காக்கர் & சுனில் வர்மா ஆகியோரால் தொடங்கப்பட்டது. பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் மணிடேப், செயலி மூலம் கடன் வழங்கும் முறையை எளிதாகவும், சிக்கலின்றியும், விரைவாகவும் செய்து முடிக்கிறது.  சிலிகான் வேலியில் 100 மில்லியன் பயனீட்டாளர்களையும் 300 மில்லியன் டாலர் வருவாயையும் ஈட்டித் தந்த ஸ்நாப் ஃபிஷ் (ஹெவ்லெட் பேக்கார்ட்டுக்கு விற்பனை) உள்ளிட்ட பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கிய பெருமை பாலா பார்த்தசாரதிக்கு உண்டு.  2007இல் இந்தியா திரும்பிய பிறகு நந்தன் நீல்கேணியின் கீழ் உதய் (UIDAI) திட்டத்தில் தன்னார்வத்துடன் பணியாற்றினார். 2011இல் ஏஞ்சல் ப்ரைம் (இப்போது ப்ரைம் வெஞ்சர் பார்ட்னர்ஸ்) தொடங்கி ஜிப் டயல் (டுவிட்டருக்கு விற்பனை), இஇசட்இடேப், ஹாப்பே ஆகிய நிறுவனங்களை உருவாக்கினார்.  டெக்ஸாஸில் பணியாற்றிய குனால், ஏர்டெல் & ஜேடபிள்யூடியில் பணியாற்றிய அனுஜ் ஆகியோர் இணைந்து நிறுவிய டாப்ஸ்டார்ட் 300,000 பயனீட்டாளர்களுடன் 2 ஆண்டுகளில் இலாபத்தை ஈட்ட ஆரம்பித்தது.  2015இல் இந்நிறுவனத்திலிருந்து இருவரும் விலகினர்.

 

மேலும் விவரங்களுக்கு http://www.moneytap.com/.

 

————————————————————————————————————————–

About Admin

Check Also

Get a good night’s rest with Philips Hue White Ambiance this World Sleep Day

Chennai/ India– Marking the World Sleep Day on March 16, Philips Lighting (Euronext: LIGHT), the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *