Friday , December 15 2017
Home / Tamilnadu Police / மணலி பகுதியில் கண்டெய்னர்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது. 2 கண்டெய்னர்கள் பறிமுதல்.

மணலி பகுதியில் கண்டெய்னர்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது. 2 கண்டெய்னர்கள் பறிமுதல்.

சென்னை மணலி புதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விச்சூர் பகுதியில் உள்ள சத்துவா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் நமச்சிவாயம், வ/ 45, த/பெ.முனிரத்தினம் என்பவர் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தங்களது நிறுவனத்தில் கிரேன் ஆப்ரேட்டர்களாக வேலை செய்து வரும் சதீஷ், சேகர் ஆகிய இருவர், நிறுவனத்திற்கு சொந்தமான 20 அடி நீளமுள்ள 2 கண்டெய்னர் பெட்டிகளை திருடி விற்பனை செய்து விட்டதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.அதன் பேரில் எம்-7 மணலி புது நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
எம்-7 மணலி புது நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி கண்டெய்னர் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கிரேன் ஆப்ரேட்டர்கள் 1.சதீஷ்,வ/32, த/பெ.வரதராஜ், எண்.12, கலைஞர்நகர், திருவொற்றியூர் 2.சேகர், வ/35, த/பெ.சுப்பிரமணி, எண்.30, வில்லேஜ் தெரு, திருவொற்றியூர் ஆகிய இருவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆப்ரேட்டர்கள் இருவரும் 20 அடி நீளமுள்ள இரண்டு கண்டெய்னர்களை, கண்டெய்னர் லாரி மூலம் கடத்தி சென்று விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் 2 கண்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.

சென்னை, கோயம்பேடு, சேமாத்தம்மன் கோயில் தெரு, 1வது செக்டாரில் கதவு எண்.52 என்ற முகவரியில் திரு.பிலால், வ/38, த/பெ.முஸ்தபா என்பவரும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *