Tuesday , August 21 2018
Home / News / பொழிச்சலூர் ஊராட்சியில் கிணற்றில் தூர்வாறும் பணியினையும், கழிப்பறை கட்டும் பணி நடைபெறுகிறது

பொழிச்சலூர் ஊராட்சியில் கிணற்றில் தூர்வாறும் பணியினையும், கழிப்பறை கட்டும் பணி நடைபெறுகிறது

vjbkbk
காஞ்சிபுரம் மாவட்டம், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம், பொழிச்சலூர்,ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)ஆகியோரது உத்தரவுப்படி நடைபெற்றுவரும் மாரியம்மன் கோவில் அருகே பொது கிணற்றில் தூர்வாறும் பணியினையும், மாரியம்மன் கோவில் தெருவில் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் பணியினையும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர். அமல்ராஜ் பார்வையிட்டார். ஊராட்சி செயலர் சங்கரன், பணி மேற்பார்வையாளர் ராமராஜன்,பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மேரி, உமாராணி உடனிருந்தனர். பொழிச்சலூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நான்கு பொது கிணறுகள் தூர்வாறும் பணியும்,திறந்த வெளியில் மலம் கழிக்கும் இடம் இல்லாத ஊராட்சியாக (ஓ.டி.எப்)அறிவிக்கும் முகமாக சுமார் 50 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் பணியும், நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

About Ragavendhar

Check Also

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் …