Wednesday , October 17 2018
Home / Tamilnadu Police / போரூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 வாலிபர்கள் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்.

போரூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 வாலிபர்கள் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த ராமசாமி (45) என்பவர் போரூர் சபரிநகரிலுள்ள ஒரு இனிப்புக் கடையில் வேலை செய்து வருகிறார். ராமசாமி கடந்த 19.9.2017 அன்று காலை மேற்படி இனிப்பு கடைக்கு வேலைக்கு சென்றபோது, கடை வாசலில் தனது ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனத்தை (பதிவு எண். கூசூ14 க்ஷ 0967) நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். பின்னர் இரவு வேலை முடித்து வந்து பார்த்தபோது, கடை வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டிருந்தனர். இது தொடர்பாக ராமசாமி ட்டி-15 எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (21.9.2017) அதிகாலை சுமார் 04.30 மணியளவில் போரூர் சிக்னல் சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை மேலும் விசாரணை செய்ததில், இருவரும் வந்த இருசக்கர வாகனம், மேற்படி ராமசாமியின் இருசக்கர வாகனம் என்பதும், ராமசாமி தான் வேலை செய்யும் இனிப்பு கடை வாசலில் நிறுத்தியிருந்தபோது திருடியதும் தெரியவந்தது.

அதன்பேரில், இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளிகள் கௌதம், வ/19, த/பெ.செல்வம், எண்.4/100, 6வது குறுக்கு தெரு, அன்னை சத்யா நகர், ராமாபுரம், சென்னை மற்றும் ஸ்ரீதர், வ/19, த/பெ.சுப்பிரமணி, எண்.8/111, 7வது குறுக்கு தெரு, அன்னை சத்யா நகர், ராமாபுரம், சென்னை ஆகிய 2 பேரை கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து மேற்படி இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.