Tuesday , October 24 2017
Home / Business / பெரும்பான்மை விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பயணிப்பதால், உலகளாவிய விமானப் பயணம் இயல்பாக இயங்குகிறது

பெரும்பான்மை விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பயணிப்பதால், உலகளாவிய விமானப் பயணம் இயல்பாக இயங்குகிறது

தோஹாவிற்கும், அங்கிருந்தும் கத்தார் ஏர்வேஸ் விமானச் சேவைகள் இயல்பாக இயங்குகின்றன. அதன் பெரும்பான்மை விமானங்கள் சரியான நேரத்தில் பயணிக்கின்றன.

கடந்த வாரம், விருது பெற்ற பன்னாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனம் சராசரியாக 1,200 விமானங்களைத் தோஹாவிலிருந்து அதன் வலைப்பணியில் அங்கம் வகிக்கும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 150க்கும் அதிகமான இடங்களுக்குப் பறந்துள்ளன. இவற்றில் 90% விமானனங்கள் குறிப்பிட்ட புறப்பாடு நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்குள் கிளம்புகின்றன.

வரும் மாதங்களில், இந்த வலைப்பணி இன்னும் வளர்ந்து விரிவடையும். நேற்று இந்த விமான நிறுவனம் ஐயர்லாந்து குடியரசின் டப்ளின் நகருக்கு நேரடி விமானச் சேவையைத் தொடங்கியது. பிரான்ஸ் நாட்டிலுலுள்ள நைஸ் நகருக்கு ஜூலை 4லும், மேசிடோனியா குடியரசின் ஸ்கோபி நகருக்கு ஜூலை 17லும் விமானச் சேவைகளை கத்தார் ஏர்வேஸ் ஆரம்பிக்க உள்ளது.

இந்த ஆண்டு மற்றும் 2018 இறுதிக்குள் லாஸ் வெகாஸ் (அமெரிக்கா), கான்பெர்ரா (ஆஸ்திரேலியா), தௌவாலா (கேமரூன்), லிப்ரேவெல்லி (கபன்), மெடன் (இந்தோனீஷியா), ரியோ டி ஜெனீரோ (பிரேசில்), சாண்டியாகோ (சிலி), சராஜீவோ (பாஸ்னியா & ஹெர்ஜீகோவினா) உள்ளிட்ட நாடுகளுக்கு விமானச் சேவை தொடங்கப்படும். 541 மில்லியன் டாலர் இலாபம் ஈட்டிய விவரத்தையும் உள்ளடக்கி இவ்வாரத் தொடக்கத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.7% அதிகமாகும். மேலும் ஆண்டு வருவாய் 10.4% அதிகரித்துள்ள செய்தியும் அறிக்கையில் காணப்படுகிறது.

இது குறித்து கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மேதகு அக்பர் அல் பேக்கர் கூறுகையில் ‘எங்கள் வலைப்பணியின் பெரும்பான்மை தற்போதைய சூழல்களால் எந்தப் பாதிப்பிற்கும் உள்ளாகாத நிலையில், கத்தார் ஏர்வேஸ் பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சேவைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழல்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதுடன், விருது பெற்ற எங்கள் சேவைப் பணியைத் தொடந்து வழங்குவதையும் உறுதிப்படுத்துகிறோம். அடுத்த மாதம் இரு புதிய இடங்களுக்கு எங்கள் விமானச் சேவையை வழங்குவதன் மூலம் விரிவுபடுத்த உள்ளோம்’ என்றார்.

அவர் மேலும் தொடர்கையில் ‘இத்தடை எதிர்பாராதது என்பதுடன் பயணிகள் விமானப் போக்குவரத்திற்கு வழங்கமாக உறுதியளிக்கப்பட்டும் உரிமைகளையும் பறிக்கும் நேரடியான நடவடிக்கையாகும். பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஓ) இதைச் சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோருகிறோம். நாங்கள் அரசியல் அமைப்பு அல்ல. விமான போக்குவரத்து நிறுவனம். இந்தத் தடை எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த உரிமைகளைப் பறித்துக் கொண்டுவிட்டது’ என்றார்.

இந்தத் தடையைத் தொடர்ந்து, தனது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த கவனத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தி உள்ளது. சமீபத்திய தடைகள் காரணமாக பயணிகளின் போக்குவரத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், விரைந்து கட்டணத் தொகையைத் திருப்பித் தரவும், மறு பதிவு செய்து கொடுக்கவும், வர்த்தகக் கொள்கையையும் விரிவுபடுத்தி இருக்கிறது, மேலும் தனது பன்னாட்டு அழைப்பு மையம் மற்றும் சமூக ஊடகங்களின் செயல்பாட்டையும் அதிகரித்துள்ளது. திரும்ப அழைத்துக் கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முகநூலில் புதிய செயல்பாட்டுத் தன்மையை விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.. உலகின் மிகச் சிறந்த சேவைகளை வழங்கும் நிறுவனம் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த விமானப் போக்குவரத்து நிறுவனம், ‘மத்தியக் கிழக்கின் மிகச் சிறந்த விமான நிறுவன ஊழியர்கள் சேவை’ விருதையும் வாடிக்கையாளர் வாக்களிப்பு மூலம் ஸ்கை டிராக்ஸ் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.

கத்தார் ஏர்வேஸின் புரட்சிகரமான ‘ஃபர்ஸ்ட் இன் பிசினஸ்’ இருக்கையான ‘க்யூசூட்’, இந்த மாதக் கடைசியில் தோஹாவிவிருந்து இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு முதன் முதலாகப் பயணிப்பதற்கு முன்பாக, ஜூன் 19 – 25 வரை பாரிஸில் நடைபெறும் விமானக் கண்காட்சியில் ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் காட்சிப்படுத்தப்படும். க்யூ சூட்டில் முதல் முறையாக பிசினஸ் பிரிவில் டபுள் பெட் வசதி அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் பயணிகள் அருகிலுள்ள இருக்கைகளையும் தங்களுக்குச் சொந்தமான அறையாக உருவாக்கிக் கொள்ளலாம். நடுவில் உள்ள நாலு இருக்கைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சரி செய்து கொள்ளும் பேனல்கள், நகர்த்தத்தக்க தொலைக்காட்சி மானிடர்கள் ஆகியவை நண்பர்கள், ஊழியர்கள், உடன் பயணிப்போர் ஆகியோர் தங்களுக்கான இடத்தைத் தனிப்பட்ட சூட்டாக மாற்றிக் கொள்ள அனுமதிப்பதுடன், இணைந்து பணியாற்றவும், ஒன்றாகச் சேர்ந்த சாப்பிடவும் உதவும்.

இந்தப் புதிய அம்சங்கள் அதிகபட்சப் பயண அனுபவத்தை வழங்குவதுடன், தங்களது வித்யாசமான தேவைகளை நிறைவு செய்யும் வகையில், பயணிகளுக்குப் புதிய சூழலை உருவாக்கித் தருகிறது.

மேலும் விவரங்களுக்கு:
கத்தார் ஏர்வேஸ் குழுமம், கார்பொரேட் கம்யூனிமேஷன்ஸ் பிரிவு, கைபேசி 974 4022 2200

About Admin

Check Also

Starbucks is thrilled to complete 100 stores in India, and wants to celebrate the milestone with you!

  An iconic milestone deserves an iconic TREAT! It’s time to celebrate 100 stores of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *