Sunday , December 16 2018
Home / News / புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு அறிமுகம்

புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு அறிமுகம்

2017-04-21 23.40.04-1கோவை கிட்னி சென்டரில் இயங்கிவரும் இரத்தம் மற்றும் இரத்தபுற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையம் சார்பில் இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் குணமடைந்த இரத்த புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு கோவையில் முதல்முறையாக தொடங்கப்பட்டது. இதனை சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் சன் டிவி புகழ் ராஜா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இரத்தநோய் சிகிச்சை நிபுணர் சுதந்திர கண்ணன் பேசுகையில், இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்க்கான தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்களுக்கு உதவுவதும், அவர்களின் தரத்தை உயர்த்துவதும் ஆகும். இரத்த புற்றுநோயானது குணபடுத்த கூடியது. பரவலாக குழந்தைகளை பாதிக்கும். இரத்தபுற்றுநோய் குழந்தைகளுக்கு 80-90% குணப்படுத்தக்கூடியது. இருந்தும் பெரியவர்களிடம் இந்நோயை குணப்படுத்தும் சதவீதம் குறைந்து காணப்படுகிறது. இதனை கண்டறிய இரத்த சோகை, காய்ச்சல், உடல் பாகங்களில் இருந்து இரத்த கசிவு போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்நோய்க்கு முதற்கட்ட சிகிச்சைக்கு பண உதவி இல்லாமையே பெரியவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர். தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இவ்வகை குழந்தைகளுக்கு உதவுவதே ஆகும்.

பிறப்பிலிருந்து பல குழந்தைகள் இரத்த நோயான தலசிமியாவால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ஒருமுறை ரத்தம் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செலுத்தினால் அவர்களின் ஆயுட்காலம் 30 வயதாகும். இதற்கு எலும்பு மஜ்சை மாற்று சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாகும். மேலும், பல ரத்தம் மற்றும் இரத்த வகை புற்றுநோய்கள் திருமண வயதில் தக்ககடியவை. நோய் குணமடைந்தாலும் சமூக சூழ்நிலையினால் திருமண வரன் பார்க்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. பல குணமடைந்த நோயாளிகளின் பெற்றோர் தகுந்த வரன் கிடைக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவ்வகையான பிரச்சனைகளை களைய ரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய் அமைப்பு குணமடைந்த புற்றுநோயாளிகளுக்கு திருமண தகவல் மையம் ஏற்படுத்தி உள்ளது என்றார் பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.மற்றும் மற்ற நிகழ்வுகளில் புற்றுநோயாளிகளை கொடூரமான முறையில் சித்தரித்து காட்டுவது தொடர்கிறது. அதனை தவிர்த்து சிறந்த விழிப்புணர்வினை ஏற்படுத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இன்று இங்குள்ளவர்களுக்கு கிடைக்கும் விழிப்புணர்வு பலருக்கும் கிடைப்பதில்லை. பொதுமக்களுக்கு இரத்தபுற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுறோய்கள் குறித்துமுழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

புற்றுநோய் வந்துவிட்டலே வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி நமக்கு எவ்வித மகிழ்ச்சிகளும் இல்லை. திருமணம் உள்ளிட்டவை நடைபெறாது என தவறான சிந்தனைகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் உள்ளது. அதனை முறியடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் குணமடைந்த இரத்த புற்றுநோயாளிக்கான திருமண தகவல் வெப்சைடு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது” என்றார்.இதனைத்தொடர்ந்து, தலசிமியா என்ற இரத்த நோயால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் முதன்முதலில் ஹேப்லோ டிரேன்ஸ்பிளான்ட் சிகிச்சை பெற்ற முகிலேஷ் என்ற சிறுவருக்கு மேக்ஸ் பவுன்டேஷன் தலைவர் விஜி வெங்கடேஷ் விருது வழங்கி பாராட்டினார்.

About Ragavendhar

Check Also

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் …