Thursday , February 21 2019
Home / Tamilnadu Police / புனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.

புனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், வ/19, த/பெ.ராமலிங்கம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சதிஷ்குமார் நேற்று (20.08.2018) மாலை சுமார் 6.30 மணியளவில் ஆலந்தூர், எம்.கே.என் சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 நபர்கள் மேற்படி சதிஷ்குமாரை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற போது, சதிஷ்குமார் சத்தம் போடவே, அருகிலிருந்த பொதுமக்கள் விரட்டிச் சென்று செல்போனை பறித்துக்கொண்டு தப்பிய நபர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். தகவலறிந்த எஸ்- 1 புனித தோமையர்மலை காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் 1.பார்த்திபன், வ/20, த/பெ.ஏழுமலை , அம்மன் கோவில் தெரு, கடப்பேரி, தாம்பரம் என்பது தெரியவந்தது. மேலும் பார்த்திபன் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகளான 2.சூர்யா, வ/19, த/பெ.குமரன், வ.உ.சி தெரு, சானடோரியம், தாம்பரம் 3.சபீர்பாஷா, வ/21, த/பெ.அன்சார்பாஷா, மசூதி தெரு, 5 வது தெரு, மடுவங்கரை, கிண்டி ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி மூன்று நபர்களும் சென்னையிலுள்ள ஒரே கல்லூரியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மற்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

போக்குவரத்து காவலர்கள் இலவச ஹெல்மெட் வழங்கினர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சாலை பாதுகாப்பு மற்றும் பொங்கல் விழா சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது  இதில் பொதுமக்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.