Sunday , October 21 2018
Home / District-News / பீகாரை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு- ஜக்கிய ஜனதாதள் கட்சி

பீகாரை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு- ஜக்கிய ஜனதாதள் கட்சி

நீட்விவகாரத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து  மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்து பேசி உரிய தீர்வை எடுக்க வேண்டும் என்று  ஜக்கிய ஜனதாதள்  கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் அகிலேஷ் கத்தியார் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் தமிழக மகளிர் அணி துவக்க விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் பீகாரை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கபடும் என்றார். நீட் விவகாரத்தில் மாணவி அனிதா தற்கொலை துரதிஷ்ட வசமானது என்றும் இவ்விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவர்களது கடமை என்றார். உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சி சிறந்து சேவையாற்றுவர்களை களம் இறக்கும் என்றார். இதை தொடர்ந்து பேசிய தமிழக மகளிரணி தலைவர் லலிதா மோகன் கூறுகையில் ஒரு மாத காலத்தில் மாவட்டந்தோறும் 5000 பெண் உறுபபினர்கள் கட்சியில் இணைக்க திட்டமிட பட்டுள்ளதாகவும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எளிதில் சந்திக்ககூடிய தலைவராக இருப்பதாகவும் அவர் தலைமையில் தமிழகத்தில் பணியாற்றுவது பெருமைகுரிய ஒன்றென லலிதா மோகன் கூறினார்..

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.