Friday , December 15 2017
Home / State-News / பி.பி.ஜி தொழில்நுட்பம் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

பி.பி.ஜி தொழில்நுட்பம் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

கோவை சரவணம்பட்டி உள்ள பி.பி.ஜி தொழில்நுட்பம் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பி.பி.ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு வரவேற்புரையாற்றினார்.   டாக்டர்  எல்.பி.தங்கவேலு முன்னிலையில் ,  இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர்  எ.கணபதி, பாலமுருகன், மண்டல  அலுவலர் AICTE மற்றும் பிச்சாண்டி   ,  ஆர்.எம்.கே.கல்வி நிறுவனம்ங்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து  அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வில் வெற்றி பெற்ற பட்டப்படிப்பு முடித்த 323 பொறியியல் மாணவ,மாணவிகள் மற்றும் மேலாண்மை கல்லூரியில் 34 மாணவ, மாணவிகளுக்கு தங்க பதங்கங்களும் வழங்கப்பட்டன. இதில் பி.பி.ஜி தொழில்நுட்பம் கல்லூரி இயக்குநர் டாக்டர்.  ஆர்.கே. ஞானமூர்த்தி, டாக்டர்  தேவசோனாதிபதி மற்றும்  அனைத்து துறை  முதல்வர்கள், போராசியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

About Admin

Check Also

Dell EMC joins hands with CIO Klub in Coimbatore

Coimbatore : Dell EMC, as part of a series of city-level seminars for local manufacturing …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *