Thursday , May 23 2019
Home / District-News / பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

“பிளாஸ்டிக் இல்லா புத்தாண்டு” சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை 26.12.2018 அன்று மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தில் 05.06.2018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சட்டமன்ற பேரவை விதி எண் 110 -ன் கீழ், சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை 01.01.2019-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் ஏற்கனவே 01.07.2018 முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், அரசு பள்ளி வளாகங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்ய அறிக்கை வெளியிடப்பட்டு, தொடர்கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் புத்தாண்டு (01.01.2019) முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான பயன்பாட்டிற்கு தடை அமல்படுத்தப்படவுள்ளதால் பொதுமக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 26.12.2018 அன்று பிளாஸ்டிக் தவிர்த்தல் தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, 27.12.2018 அன்று அனைத்து வணிக சங்கங்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம். 28.12.2018 அன்று பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டினை துவக்கி வைத்தல். 29.12.2018 அன்று பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தல் தொடர்பான மனித சங்கிலி பேரணி, 30.12.2018 அன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம், 4 மண்டல அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட 1000 இடங்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை சேகரிப்பதற்கான அட்டைபெட்டிகள் வைப்பது போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதனடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்த்தல் தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் தொடங்கி செரி ரோடு மற்றும் அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக கோரிமேடு சட்டக்கல்லூரி வரையில் சென்றடையும். இப்பேரணியில் பெரியார் பல்கலைகழகம், ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோனா பொறியியல் கல்லூரி, சண்முகா பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த மாணவ/மாணவிகள், சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள், சேலம் மோட்டார் சைக்கிள் கிளப் மற்றும் சேலம் பைக்கர்ஸ் கிளப் ஆகிய தன்னார்வ அமைப்பை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
மேலும், “”””பிளாஸ்டிக் இல்லா புத்தாண்டு”” நடைமுறைப்படுத்தி, எதிர் வரும் புத்தாண்டு முதல் சேலம் மாநகராட்சியினை பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சியாக உருவாக்கிட பொதுமக்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கிடுமாறு ஆணையாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் முனைவர் அ.அசோகன்,  மாநகர நல அலுவலர் மரு.கே.பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் திரு.பி.ரமேஷ்பாபு, திரு.பி.கே.கோவிந்தன், திரு.ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், திரு.எம்.சுந்தரராஜன் உதவி செயற்பொறியாளர்கள் திரு.கே.செந்தில் குமார், திருமதி.வி.திலகா, திரு.ஆர்.செந்தில் குமார், சுகாதார அலுவலர்கள் திரு.எம்.சேகர், திரு.கே.ரவிச்சந்தர், திரு.எஸ்.மணிகண்டன், திரு.பி.மாணிக்கவாசகம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Ragavendhar

Check Also

Max Little Icon 2019 Chennai Finale held on 19th May 2019

Chennai, 19th May 2019: India’s leading fashion brand Max Fashion concluded its Max Little Icon …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.