Saturday , April 21 2018
Home / News / பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : மனநலம் தொடர்பான ஆலோசனைகளை பெற 104 என்ற எண்ணில் மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : மனநலம் தொடர்பான ஆலோசனைகளை பெற 104 என்ற எண்ணில் மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்

May 12, 2017 News, State-News Comments Off on பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : மனநலம் தொடர்பான ஆலோசனைகளை பெற 104 என்ற எண்ணில் மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் 195 Views

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதனையொட்டி, மனநலம் தொடர்பான ஆலோசனைகளை பெற 104 என்ற எண்ணில் மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதனையொட்டி, மன ரீதியாக பாதிக்கப்படும் மாணவ – மாணவிகள் உரிய ஆலோசனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, நாள் தோறும் எண்ணற்ற மாணவர்களும், பொதுமக்களும் 104 மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொண்டு, பல்வேறு உளவியல் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டிருப்பதால் இந்த உதவி மையங்கள் மூலம் இன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

About Ragavendhar

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …