Sunday , January 20 2019
Home / National-News / பா.ஜனதாவின் வியாபார தந்திரம் நீண்ட நாள் எடுபடாது: ஷீலா தீட்சித்

பா.ஜனதாவின் வியாபார தந்திரம் நீண்ட நாள் எடுபடாது: ஷீலா தீட்சித்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில ஒருவருமான ஷீலா தீட்சித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லி உள்ளாட்சி தேர்தல் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வேட்பாளர் தேர்வு சரியாக இல்லை.

பா.ஜனதாவிடம் 10 ஆண்டுகள் மாநகராட்சி இருந்தும் அவர்கள் சிறப்பாக செயல்படாதது குறித்து மக்களிடம் உரிய முறையில் காங்கிரஸ் எடுத்து சொல்லவில்லை.

கடந்த சட்டசபை தேர்தலை விட காங்கிரசுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இங்கு மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களிலும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி என்பது நீண்டு கொண்டே செல்லும் ஒன்றல்ல. பா.ஜனதா வெற்றிக்கும் ஒரு முற்றுப்புள்ளி வரும்.

தற்போது பா.ஜனதா ஒரு பொருளை பிரபலப்படுத்துவது போல் வியாபார தந்திர பணிகளை கட்சிப்பணியாக செய்து கொண்டு இருக்கிறது. அந்த பணிகளால் அவர்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கலாம்.

ஆனால், இது நீண்ட காலம் எடுபடாது. இன்றைய இந்தியாவை இந்த அளவுக்கு உருவாக்கி வைத்திருப்பதே காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்.

பா.ஜனதாவின் மோசமான கொள்கைகள், அவற்றின் தவறான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் இன்னும் அதிகமாக எடுத்து சொல்ல வேண்டும். மக்களுடன் அதிக தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

About Ragavendhar

Check Also

(AIFPA) Platinum Jubilee Conference inaugurated by Hon’ble President of India

All India Food Processors’ Association (AIFPA) Est. in 1943, comprising Food Processors’ Operators along with …