சென்னை, மேடவாக்கம், விஜயநகரம், ராஜாமணி கோயில் தெரு, எண்.7/433 என்ற முகவரியில் வேணுகோபால், வ/55, த/பெ.பலராமன் நாயக்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஸ்ரீராதாருக்மணி சுமேத ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். கடந்த 15.03.2018 அன்று இரவு மேற்படி கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அடையாளம் தெரியாத நபர் சுமார் ரூ. 5 ஆயிரத்தை திருடிச்சென்றதாக மேற்படி வேணுகோபால் எஸ்-10 பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
எஸ்-10 பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சங்கர், வ/40, த/பெ.ஆனந்தன், எண்.3/86, மேட்டுத் தெரு, பொழிச்சலூர் ஏன்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1500/- பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சங்கர் கொத்தனாராக வேலை செய்து வருவது தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குற்றவாளி சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டார்.
