Friday , April 26 2019
Home / Tamilnadu Police / பல் மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் குறைந்த விலையில் புத்தகம் வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றிய நபர் கைது.

பல் மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் குறைந்த விலையில் புத்தகம் வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றிய நபர் கைது.

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் ஷியாம்பிரசாத், வ/22, த/பெ.வேணுகோபால் என்பவர் பி.டி.எஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தைச் சேர்ந்த சக்தி என்பவர், ஷியாம் பிரசாத்திடம் குறைந்த விலைக்கு பல் மருத்துவம் தொடர்பான புத்தகங்கள் வாங்கி தருவதாகவும், அதற்கு உறுப்பினராக சேர ரூ.800 தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ஷியாம்பிரசாத் ரூ.800 கொடுத்து உறுப்பினராக சேர்ந்துள்ளார். ஆனால் மேற்படி சக்தி என்பவர் புத்தகங்களை வாங்கி கொடுக்காமலும் பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக ஷியாம்பிரசாத் ஊ-1 பூக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சி-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட சக்தி, வ/29, த/பெ.பலராமன், எஸ்.என்.என் கிளேவ், 3வது மாடி, வள்ளுவன் சாலை, அரும்பாக்கம் என்பவரை நேற்று (23.01.2018) கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட சக்தி தனியார் புத்தக நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலை செய்து வருவது தெரியவருகிறது. மேலும் சக்தி இதே போன்று சித்தமருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் சுமார் 80 மாணவர்களிடம் தலா ரூ.800/- வசூலித்து மோசடி செய்துள்ளதும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சக்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.