Thursday , February 22 2018
Home / Tamilnadu Police / பல்லாவரம் பகுதியில் இருவேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி கைது.

பல்லாவரம் பகுதியில் இருவேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி கைது.

சென்னை, பழைய பல்லாவரம், ஹாபர்குவாரி தர்கா சாலை, எண்.3 என்ற முகவரியில் வசிக்கும் ராஜா, வ/40, த/பெ.பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 25.12.2017 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில் பல்லாவரம் கன்டோன்மென்ட் பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ராஜாவை வழிமறித்து, அவரை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்-1 மற்றும் பணம் ரூ.500/- ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து, ராஜா ளு-5 பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆறுமுகம், வ/31, த/பெ.முனியப்பன், எண்.1, ரங்கநாதன் தெரு, குரோம்பேட்டை என்பவர் நேற்று (26.12.2017) காலை சுமார் 08.00 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பல்லாவரம் திருநீர்மலை சாலை சந்திப்பு அருகே வரும்போது, மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை நிறுத்தி அவரை மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பணம் ரூ.1,500/- ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது ஆறுமுகம் சத்தம் போடவே, சற்று தொலைவில் பாதுகாப்பு பணியிலிருந்த ளு-5 பல்லாவரம் காவல் நிலைய சுற்றுக் காவல் வாகன ரோந்து போலீசார் அந்த மர்ம நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் அனகாபுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பதும், இவர் மேற்படி ராஜாவிடமும் செல்போன் பறித்துச் சென்ற நபர் இவர்தான் என்பதும் தெரியவந்தது.

அதன்பேரில், குற்றவாளி ஸ்ரீதர், வ/23, த/பெ.மோகன், எண்.21, குளக்கரை தெரு, அனகாபுத்தூர் என்பவரை நேற்று (26.12.2017) கைது செய்து, அவரிடமிருந்து மேற்படி செல்போன்கள்-2 மற்றும் பணம் ரூ.600/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், குற்றவாளி ஸ்ரீதர், ளு-6 சங்கர் நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

கே.கே.நகரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், பகுதியில் உள்ள பிளாட்பார்மில் ஜெயகுமார் (எ) குமார், வ/45, த/பெ.குள்ளகுமார் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *