Tuesday , September 25 2018
Home / Tamilnadu Police / பல்லாவரம் பகுதியில் இரும்பு வியாபாரிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய பெஙகளூரைச் சேர்ந்த 11 நபர்கள் கைது. 3 கத்திகள் மற்றும் 3 கார்கள் பறிமுதல்.

பல்லாவரம் பகுதியில் இரும்பு வியாபாரிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய பெஙகளூரைச் சேர்ந்த 11 நபர்கள் கைது. 3 கத்திகள் மற்றும் 3 கார்கள் பறிமுதல்.

சென்னை, பல்லாவரம், நேரு நகர், எண்.15 என்ற முகவரியில் பாபு, வ/49, த/பெ.தமீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரத்தை சேர்ந்த தனது நண்பர் ஆருண் ரஷித் வ/26 என்பவருடன் சேர்ந்து பல்லாவரம் 200 அடி சாலையில் க்ஷடுமு ஊடிளேவசரஉவiடிn என்ற நிறுவனத்தில் இருந்து மொத்தமாக இரும்புகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றார். நேற்று (03.01.2018) மாலை சுமார் 4.00 மணியளவில் மேற்படி நிறுவனத்திற்கு பாபு மற்றும் ஆருண் ரஷீத் ஆகிய இருவரும் இரும்புகளை வாங்குவதற்கு சென்றுள்ளனர். அங்கு பெங்களூரைச்சேர்ந்த 11 நபர்களும் மொத்தமாக இரும்புகளை வாங்குவதற்கு வந்துள்ளனர். இரும்பு பொருள்களை வாங்குவதில் பாபு, ஆருண் ரஷித் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 11 நபர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெங்களூரைச்சேர்ந்த 11 நபர்கள், பாபு மற்றும் ஆருண் ரஷித் ஆகிய இருவரையும் கையால் தாக்கியும், கத்தியைக் காட்டி மிரட்டியும் உள்ளனர். இது தொடர்பாக பாபு மற்றும் ஆருண்ரஷித் ஆகிய இருவரும் எஸ்-5 பல்லாவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எஸ்-5 பல்லாவரம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1. ஷேக்கான், வ/40, த/பெ.பயஸ்கான், பெங்களூரு 2.ஜாகீத் ஜமீர், வ/34, த/பெ. ஜமீர் , எண்.594, 3 வது குறுக்கு தெரு, கனகா நகர், பெங்களூரு, 3.சையது முபாராக், வ/24, த/பெ. சையது அஸ்லாம், பெங்களூரு 4. முகமது சலீம், வ/30, த/பெ.சர்தார், எண்.246, பெங்களூரு 5.ரிச்சர்ட்சன், வ/29, த/பெ.சகாயநாதன், தங்கமலை நகர், பெங்களூரு 6.பிரதீப்ராஜ், வ/25, த/பெ.முனுசாமி, பெங்களூரு, 7.ஜெய்ரமேஷ், வ/36, த/பெ.காணிக்கைராஜ், எண்.206, டி.கே.ஆர் நகர், பெங்களூரு 8.ஸ்டீபன்ராஜ், வ/20, த/பெ.ராஜா, எண்.113, டேனி ரோடு, பெங்களூரு 9.மோகன், வ/33, த/பெ.காதிராஜ், எண்.41, டேனிரோடு, பி.கே.நகர், பெங்களூரு 10.முகைதீர் பாட்ஷா, வ/32, த/பெ.முகமது அன்வர், எண்.52, ஜெ.பி நகர், பெங்களூரு 11.நைம் ஷெரீப், வ/29, த/பெ.அஜிஸ் முகமது செரிப், பெங்களூரு ஆகிய 11 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று கத்திகள் மற்றும் கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 11 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.