Sunday , June 24 2018
Home / Tamilnadu Police / பட்டினப்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் செல்போன் பறித்துச் சென்ற 3 பேர் கைது.

பட்டினப்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் செல்போன் பறித்துச் சென்ற 3 பேர் கைது.

சென்னை, மைலாப்பூர், சித்திரைக்குளம் தெற்கு தெரு, எண்.37 என்ற முகவரியில் மோகன், வ/32, த/பெ.சண்முகம், என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். மோகன் கடந்த 01.03.2018 அன்று காலை 10.30 மணியளவில் பெரியபள்ளி தெரு, மாதாசர்ச் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் மேற்படி மோகனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக மோகன் இ-5 பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரைணை செய்யப்பட்டது
பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1. ரஞ்சித், வ/20, த/பெ.முருகன், எண்.5/2, பிள்ளையார் கோவில் தெரு, இளங்கோ நகர், கொட்டிவாக்கம் 2.விவேக், வ/20, த/பெ.பாஸ்கர், எண்.37, சாஸ்திரி நகர், முல்லைத் தெரு, காமராஜர் நகர், பெருங்குடி 3. சாந்தகுமார், வ/19, த/பெ.காமராஜ், எண்.51/22, கன்னியம்மாள் கடை, திருவேங்கடம் தெரு, அடையாறு ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 செல்போன், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *