Wednesday , January 16 2019
Home / Tamilnadu Police / பட்டினப்பாக்கம் பகுதியில் வாலிபரிடம் செல்போன் பறித்த இரண்டு நபர்கள் கைது.
Illustration of a police station building on a white background

பட்டினப்பாக்கம் பகுதியில் வாலிபரிடம் செல்போன் பறித்த இரண்டு நபர்கள் கைது.

சென்னை, புளியந்தோப்பு, மன்னார்சாமி கோயில் தெரு, எண்.91/74 என்ற முகவரியில் வடமாநிலத்தைச் சேர்ந்த முகமதுஅஜ்மீர், வ/19, த/பெ.முகமது முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த 04.02.2018 அன்று மாலை சுமார் 6.00 மணியளவில் எம்.ஆர்.சி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், மேற்படி முகமது அஜ்மீரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இது தொடர்பாக முகமது அஜ்மீர் இ-5 பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இ-5 பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1.விஷால் (எ) எலி, வ/22, த/பெ.பாஸ்கர், 3 வது தெரு, நடுகுப்பம், திருவல்லிக்கேணி 2.சரவணன், வ/22, த/பெ.வேலாயுதம், எண்.34, 3 வது தெரு, நடுகுப்பம் திருவல்லிக்கேணி ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ரூ.1.25கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபர் கைது .

சென்னை-125, போரூர், மதனந்தபுரம், ராஜராஜேஸ்வரி நகர், நேதாஜி தெருவில் வசிக்கும், திரு.A.ஹரிகுமார், வ/46, த/பெ.தாமோதரன், என்பவருக்கு சொந்தமான சென்னை, போருர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.