Saturday , January 20 2018
Home / Hospitals / ‘நீரிழிவை நாம் தோற்கடிப்போம்’ பரப்புரை திட்டம்!

‘நீரிழிவை நாம் தோற்கடிப்போம்’ பரப்புரை திட்டம்!

சென்னை, 2017, நவம்பர் :நீரிழிவை தோற்கடிப்பதற்கான ஆற்றல் நமது கைகளில் தான் இருக்கிறது. இந்த செய்தியுடன் நீரிழிவியலில் இந்தியாவின் முன்னணி நிபுணரான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம்(DMDSC)இ நீரிழிவு குறித்து மக்களுக்கு எடுத்து கூறி கற்பிப்பதை இலக்காகக் கொண்டு‘நீரிழிவை நாம் தோற்கடிப்போம்’ என்ற பெயரிலான ஒரு பொது செயல்முயற்சியை தொடங்கியிருக்கிறது. இந்த சிறப்பான குறிக்கோளுக்கு தங்களது மனமார;ந்த ஆதரவை வழங்கிய நடிகர்கள் திரு. S.V. சேகர்,Ms. ரேவதி,Ms. கவுதமி ஆற்காடு இளவரசர் திரு. நவாப் முகமது அப்துல் அலி, பாடலாசிரியர் திரு. வைரமுத்து, பின்னணிப்பாடகி திருமதி. சுஜாதா மோகன் மற்றும் ஸ்குவாஷ் சேம்பியன் திருமதி. தீபிகா பள்ளிக்கல், டாக்டர். ஏ. மோகன், டாக்டர். இரஞ்சித் உன்னிகிருஷ்ணன் மற்றும் டாக்டர். சு.ஆ. அஞ்ஜனா ஆகியோரைக் கொண்ட DMDSC-ன் குழுவினரோடு இணைந்து இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளத்தை அறிமுகம் செய்தனர். அத்துடன் நீரிழிவை தோற்கடிப்பதற்கான உறுதிமொழியை ஏற்றனர். இந்த அறிமுக நிகழ்வின் ஒரு பகுதியாக நீரிழிவு நிலையுடனான தங்களது யுத்தத்தில் வெற்றிகரமாக ஜெயித்து இந்த கோளாறோடு 55 ஆண்டுகளுக்கும் அதிகமாக வாழ்ந்திருக்கும் 3 நீண்டகால நோயாளிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தினால் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு முடிவுகளில், இந்தியாவில் நீரிழிவு நிலையோடு வாழ்கின்ற நபர்களில் 50 சதவீதத்தினர் அவர்களது நோய்நிலை குறித்து அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டது. நீரிழிவினால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்தை புரிந்துகொள்ளவும் மற்றும் தங்களுக்கு மட்டுமின்றி தங்களைச் சுற்றியுள்ள பிறருக்காகவும் நீரிழிவை தோற்கடிப்பதற்கான யுத்தத்தில் இணையவும் மக்களை ஊக்குவிப்பதை ‘நீரிழிவை நாம் தோற்கடிப்போம்” என்ற பிரச்சார இயக்கம் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. இப்பிரச்சார இயக்கத்தின் ஒரு அங்கமாக இடம்பெற, இதற்கான உறுதிமொழியை எடுப்பதற்கு  www.letsdefeatdiabetes.com -ல் லாகின் செய்யவும். இன்ட்ராக்ட்டிவ் செயல்திறன் கொண்ட இந்த வலைதளம், நீரிழிவை மேலாண்மை செய்ய தங்களது தினசரி வாழ்க்கையில் இணைக்கப்பட வேண்டிய மாற்றங்கள் மீதான தகவலை கேட்டு பெறவும் இந்த நோய் நிலை குறித்து இன்னும் சிறப்பாக அறிந்துகொள்ளவும், இது தொடர்பாக நிபுணர்களின் காணொளி காட்சிகளையும், இன்ட்ராக்ட்டிவ் உள்ளடக்கங்களையும் பதிவிறக்கம் செய்யவும் உதவுகிறது. இதை தொடர்ந்து,நிபுணர்களுடன் நேரடி கலந்துரையாடல்கள், வாக்கத்தான்கள், உணவு நெறிமுறைகள் மற்றும் உடற்பயிற்சி அமர்வுகள் ஆகியவை நிகழும். இந்த முனைப்புத்திட்டமானது, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிற உலக நீரிழிவு தினத்தையொட்டி நடத்தப்படுகிறது. வரும் ஆண்டில் இதுகுறித்த விழிப்புணர்வை பரப்ப படிப்படியாக செயலப்படுத்தப்படும் வகையில் இந்தியாவில் 10 நகரங்களை ‘நீரிழிவை நாம் தோற்கடிப்போம்’ என்ற இந்த பிரச்சார இயக்கம் இலக்காகக் கொண்டிருக்கிறது.

இந்த அறிமுகம் குறித்து பேசிய டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரும் முதன்மை நீரிழிவு சிகிச்சை நிபுணருமான டாக்டர். ஏ. மோகன்,’‘நீரிழிவு நோயை தோற்கடிப்போம்’ என்ற இந்த பரப்புரை இயக்கத்தை இந்திய குடிமக்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். நம் நாட்டில் நீரிழிவு நோயானது, உயிரிழப்புக்கான முதன்மையான காரணங்களுள் 7வதாக இருக்கின்றபோதிலும் மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதால் இப்பரப்புரை திட்டத்தின் வழியாகஅதுகுறித்த விழிப்புணர்வை பரப்பநாங்கள் விரும்புகிறோம். நீரிழிவுக்கு முந்தைய நிலையிலிருந்து நீரிழிவு நோயாக உருவாகக்கூடிய வளர்ச்சியை வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபரானவர் ஒரு எளிய டீடுருநு ஃபார்முலாவை மனமுவந்து தவறாது பின்பற்ற வேண்டும். எ.கா. இரத்த பரிசோதனை, வாழ்க்கைமுறை மாற்றங்கள், உங்கள் உணவு குறித்த சரியான புரிதல் மற்றும் உடற்பயிற்சி (Blood checks,lifestyle changes,understanding your food and exercise) முறையான சிகிச்சை திட்டம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களின் வழியாக நீரிழிவு நோயாளிகள் நோய் பாதிப்பில்லாமல் நீண்டகாலம் வாழமுடியும்.

இன்றைக்கு உங்களோடு நாங்கள் பகிர்ந்துகொண்டிருக்கிற, நீண்டகாலமாக நீரிழிவு நிலையோடு வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை பயணமானது, நீரிழிவை தோற்கடிக்கமுடியும் என்ற எங்களது நம்பிக்கைக்கு உயிருள்ள சாட்சியமாக இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பானது,(ஐனுகு) 2017ஆம் ஆண்டை பெண்கள் மற்றும் நீரிழிவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆண்டாக அறிவித்திருக்கிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 2.1 மில்லியன் உயிரிழப்புகளை விளைவித்து உலகில் பெண்களில் இறப்புக்கான 9வது முன்னணி காரணமாக நீரிழிவு இருந்து வருகிறது. தற்போது 199 மில்லியனுக்கும் கூடுதலான பெண்கள் நீரிழிவு நிலையோடு வாழ்ந்து வருகின்றனர். 2040ஆம் ஆண்டுக்குள் இது 313 மில்லியனாக அதிகரிக்குமென்று கணிக்கப்பட்டிருக்கிறது. நீரிழிவு நிலையிலுள்ள ஒவ்வொரு 5 பெண்களுள் இருவர் கருத்தரிக்கும் திறனுள்ள வயதுப்பிரிவை சேர்ந்தவர்கள். உலகளவில் இவர்களின் எண்ணிக்கை 60 மில்லியனுக்கும் அதிகமாகும்.
தமிழ்நாடு அரசின் நல வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் முதன்மை செயலர் டாக்டர். து ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பேசுகையில்,’நீரிழிவு நிலைக்கான உயர் இடர்வாய்ப்போடு இந்தியா இருக்கிறது என்பதால் இதை உடனடியாக நாம் கவனத்தில் கொண்டு செயலாற்றுவது அவசியமாகும். இதை மேலாண்மை செய்வதற்கு நாம் ஒவ்வொருவமே உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். ‘நீரிழிவு நோயை தோற்கடிப்போம்’ என்ற இந்த பிரச்சார இயக்கமானது, டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிற ஒரு பாராட்டுதலுக்குரிய முனைப்பு திட்டமாகும். நமது உடல்நலத்திற்கு நாமே பொறுப்பு என்பதால், ஒவ்வொரு தனிநபரும் மனமுவந்து முன்வந்து நீரிழிவு நோயை தோற்கடிப்பதற்கான உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.
திரைப்பட நடிகை திருமதி ரேவதி பேசுகையில்,’நமது சமுதாயத்தின் முதுகெலும்பாக பெண்கள் திகழ்கின்றனர். நீரிழிவு நோயால் அவதியுறுகின்ற பெண்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிவேகமாக வளர்ந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் கர்ப்பகால நீரிழிவால் 40 லட்சம் பெண்கள் அவதியுறுகின்றனர். அத்துடன், வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவால் இன்னும் அநேகர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக முன்னறிவிப்பின்றி சத்திமின்றி உட்புகுந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்நோய் குறித்து அநேகர் அறியாமல் இருக்கின்றனர். இந்த உயிருக்கு ஆபத்தான நிலை குறித்து நன்கு அறிந்துகொள்ளுமாறும் மற்றும் இது குறித்த விழிப்புணர்வை பிறரிடம் பரப்புவதற்காக நீரிழிவு நோயை தோற்கடிப்போம் என்ற எங்களது இந்த போரில் இணையுமாறும் அனைத்து பெண்களையும் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.

திரைப்பட நடிகை கவுதமி கூறியதாவது:’பெண்கள் என்ற நிலையில், நமது குடும்பத்தின் நலம் குறித்து நான் அதிக கவலையும், அக்கரையும் கொண்டிருப்பதால் நமது சொந்த உடல்நலத்தை பலநேரங்களில் உதாசீனம் செய்ய முற்படுகிறோம். நீரிழிவு நோய் மட்டுமின்றி புற்றுநோயும்கூட நமது நாட்டில் விரைவாக பரவி வருகிறது. நீரிழிவு நோய்க்கும், புற்றுநோய்க்கும் இடையே ஒரு பிணைப்பு நிலை இருந்து வருகிறது. நமது குடும்பங்களுக்காக மட்டுமின்றி நமக்காகவும் கூட இப்பரப்புரை திட்டத்தில் பங்கேற்று இதற்கான உறுதிமொழியை எடுக்க முன்வருவது நம் ஒவ்வொருவருக்கும் முக்கியமானதாகும். நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்றவைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை செய்யாவிடில் விரைவிலேயே உயிரிழப்பை அவைகள் விளைவிக்கும் என்பதால், நமது உடல்நிலை குறித்து நாம் நன்கு அறிந்திருப்பது அவசியமாகும்.”

டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் குறித்து :
தமிழ்நாட்டின் சென்னையில் தலைமையகத்தைக்கொண்டிருக்கும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது (DMDSC) 1991-ம் ஆண்டில் நிறுவப்பட்டு, நீரிழிவு சிறப்பு சிகிச்சைகளுக்கான சங்கிலித்தொடர் நிறுவனமாகும். இந்தியாவில் 35 நீரிழிவு சிகிச்சை மையங்களையும் மற்றும் கிளினிக்குகளையும் கொண்டு நீரிழிவுக்கு விரிவான சேவைகளை இது நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கிவருகிறது (சென்னையில் 9 சிகிச்சை மையங்கள், வேலூரில் 2 ரூ குடியாத்தம், ஐதராபாத்தில் 5, பெங்களுருவில் 4, கேரளாவில் 2 மற்றும் மைசூர், மங்களுர், கோயம்புத்தூர், மதுரை, பாண்டிச்சேரி, சூணாம்பேட்டை, தஞ்சாவூர், விஜயவாடா, புதுடெல்லி மற்றும் புவனேஸ்வர், லக்னோ, தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் முறையே ஒரு மையம்) மற்றும் இந்த சிகிச்சை மையங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான நிரிழிவு நோயாளிகள், சிகிச்சைக்காக தங்களை பதிவுசெய்துகொண்டுள்ளனர். இந்நிறுவனமானது, முழுமையான நீரிழிவு சிகிச்சை, நீரிழிவால் பாதிக்கப்பட்ட கண்களுக்கான சிகிச்சை, நீரிழிவு கால் பராமரிப்பு சேவைகள், நீரிழிவு சார்ந்த இதய சிகிச்சை, நீரிழிவு சார்ந்த வாய் ஃ பற்களுக்கான சிகிச்சை, முன்தடுப்பு பராமரிப்பு, உணவுமுறை ஆலோசனை மற்றும் ஒரு மிக நவீன பரிசோதனையகம் ஆகிய பிரிவுகளில் சிறப்பு கவனமும், நிபுணத்துவமும் கொண்டிருக்கிறது. இங்கு சிகிச்சைக்கான முன்பதிவுகளை 920920 0091 என்ற எண்ணில் தொடர்புகொண்டு செய்யலாம் மற்றும் ஃ அல்லது www.drmohans.com ,என்ற இணையதளத்தில் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

About Admin

Check Also

Dr Anoop Misra’s ‘Diabetes with Delight: A Joyful Guide to Managing Diabetes in India’ released at World Book Fair in Delhi

Chennai, January , 2018: Diabetes with Delight, a comprehensive manual on diabetes by Dr Anoop …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *