Monday , December 17 2018
Home / Tamilnadu Police / நவீன முறையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து கும்பல் கைது.

நவீன முறையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து கும்பல் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஆ-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.02.2018) மாலை சுமார் 05.00 மணியளவில், அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, குமரன் மருத்துவமனை அருகிலுள்ள சர்வீஸ் சாலையில் ஒரு கார் நீண்ட நேரம் நின்றிருப்பதை கண்டு அருகில் சென்றனர். அப்பொழுது போலீசார் அருகில் வருவதை பார்த்ததும், அங்கிருந்த 2 பேர் தப்பியோடவே, காரிலிருந்த ஓட்டுநர் பிடிபட்டார். மேலும், அங்கு நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் நின்றிருந்த டாடா மேஜிக் லோடு வேனில் (பதிவு எண்.கூசூ18 ஆ 7945) 20 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், மேற்படி லோடு வேனில் குட்கா பாக்கெட்டுகள் அடங்கிய மூட்டைகளை பதுக்கி வைத்து, கிடங்கு போல பயன்படுத்தி வந்ததும், தேவையான பொழுது கார் மற்றும் மற்ற வாகனங்களில் வந்து மேற்படி லோடு வேனிலிருந்து குட்கா பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்று மற்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்து விற்பனை செய்து வந்ததும், அது போல மேற்படி காரில் குட்கா மூட்டைகளை ஏற்றிச் செல்ல வந்தபோது பிடிபட்டதும் தெரியவந்தது.

அதன்பேரில், பிடிபட்ட மேற்படி காரின் ஓட்டுநர் விசாகராஜ், வ/43, த/பெ.பெரியசாமி, எண்.7வது தெரு, பாலகணேசன் நகர், செங்குன்றம், சென்னை-52 என்பவரை கைது செய்து, மேற்படி வேனிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ரெமோ – 65,280 பாக்கெட்டுகள், ஹான்ஸ்-6000 பாக்கெட்டுகள், சுவாகத் – 1,800 பாக்கெட்டுகள், மாவா – 1 கிலோ மற்றும் மேற்படி டாடா இன்டிகோ கார் (பதிவு எண்.கூசூ19 ஓ 7337) மற்றும் டாடா மேஜிக் லோடு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் பிரேம்குமார் மற்றும் நித்யா ஆகியோரை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட விசாகராஜ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.