Sunday , July 22 2018
Home / Tamilnadu Police / நடந்து சென்ற நபரிடம் குடிபோதையில் உருட்டுக்கட்டையால் தாக்கிய இருவர் கைது.

நடந்து சென்ற நபரிடம் குடிபோதையில் உருட்டுக்கட்டையால் தாக்கிய இருவர் கைது.

March 21, 2018 Tamilnadu Police Leave a comment 58 Views

சென்னை, திருவொற்றியூர், 2 வது தெரு, பெரி மேட்டுப்பாளையம், எண்.39/6 என்ற முகவரியில் ரவி வ/49, த/பெ.குப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் டி.எச்.ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் மேற்படி ரவி என்பவரை வழிமறித்து வீண் தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் மேற்படி இருவரும் சேர்ந்து அருகில் கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ரவியை தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த ரவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ரவி எச்-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

எச்-8 திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.மகேஷ், வ/24, த/பெ.குப்பன், எண்.49/16, திருவள்ளுவர் நகர், அயனாவரம் 2.ராஜ், வ/22, த/பெ.ராமன், எண்.249/37, கிராமத்தெரு, திருவொற்றியூர் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட மகேஷ் மீது கொலைமுயற்சி வழக்கு உள்ளது. மேலும் இவர் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *