Thursday , January 18 2018
Home / Tamilnadu Police / நசரத்பேட்டை மற்றும் நீலாங்கரை பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 நபர்கள் கைது. 341 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1700/- பறிமுதல்
Illustration of a police station building on a white background

நசரத்பேட்டை மற்றும் நீலாங்கரை பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 நபர்கள் கைது. 341 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1700/- பறிமுதல்

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கூ-16 நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (4.1.2018) மாலை 4.00 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பெங்களூரு நெடுஞ்சாலை, பாப்பான் சத்திரம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரே இளநீர் கடையை ரகசியமாக கண்காணித்தபோது, அந்த இளநீர் கடையில் இருவர் சட்டவிரோதமாக வெளிமாநில விஸ்கி பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக வெளி மாநில மதுவை விற்பனை செய்து கொண்டிருந்த 1.ஞானம், பெ/வ-45, க/பெ.அர்ஜுனன், மேட்டு தெரு, ஆவணிப்பூர், செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் 2.நடராஜன், வ/37, த/பெ.முனுசாமி, நத்தக்குட்டை, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 330 வெளி மாநில விஸ்கி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல து-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.1.2018) அக்கரை பேருந்த நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 1.மணி, வ/45, த/பெ.சின்னத்தம்பி, எண்.295, ஆவுடையார் கோவில், புதுக்கோட்டை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 11 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1700/- பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

29th road safety week-2018 signature Camp.

Chennai 2018: 29th road safety week-2018 signature Campaign held at anna salai Spencer’s junction. The …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *