Sunday , May 26 2019
Home / National-News / தொழில் துறை அமைச்சர் திரு M .C .சம்பத் அவர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்தார்

தொழில் துறை அமைச்சர் திரு M .C .சம்பத் அவர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்தார்

மாண்புமிகு மத்திய ,அறிவியல் , தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல்,வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாறுதல் துறை அமைச்சர் டாக்டர் .ஹர்ஷ்வர்தன் அவர்களை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு M .C .சம்பத் அவர்கள் இன்று 27-06-17 புது டில்லியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களின் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின்போது சுற்றுச்சூழல் விதிமீறல் இனங்களுக்கு வரன்முறை படுத்தும் அதிகாரத்தினை மாநில அரசுக்கு வழங்கக்கோரினார். தமிழ் நாடு அரசின் தொழில் துறை முதன்மை
 செயலாளர் திரு.அதுல்ய மிஸ்ரா,இ.ஆ.ப.,தமிழ்நாடு அரசு கனிமவளத்துறை ஆணையாளர் டாக்டர் .R .பழனிச்சாமி.இ.ஆ.ப., ஆகியோரும் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.
​சந்திப்பு.2.​
மாண்புமிகு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திருமதி.நிர்மலா சீதாராமன்   அவர்களை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு M .C .சம்பத் அவர்கள் இன்று 27-06-17 புது டில்லியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.இச் சந்திப்பின்போது தமிழ் நாட்டில் தொழில் துறை முதலீடுகள் மற்றும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பின்போது தமிழ் நாடு அரசின் தொழில் துறை முதன்மை செயலாளர் திரு.அதுல்ய மிஸ்ரா,இ.ஆ.ப.,தமிழ்நாடு அரசு கனிமவளத்துறை ஆணையாளர் டாக்டர் .R .பழனிச்சாமி.இ.ஆ.ப., ஆகியோரும் உடனிருந்தனர்

About Admin

Check Also

Wakefit’s #MaaKyaChahtiHai Campaign Aims to Make Mother’s Day Special for Supermoms

National, 2019: Our mothers are undeniably our true superheroes. From the first morning alarm until …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.