சென்னை கொளத்தூர், பூம்புகார் நகர், 1வது மெயின் ரோடு, எண்.2ல் வசித்து வரும் பாதுஷா, வ/49, த/பெ.இப்ராகிம் என்பவர் வண்ண மீன்கள் ஆராய்ச்சி மற்றும் விற்பனை செய்து கொண்டு, சென்னை, செங்குன்றம், திருவள்ளூர் பிரதான சாலையிலுள்ள ஜெரிசியா பவுண்டேஷன் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் உறுப்பினராகவும், நன்கொடையாளராகவும் இருந்து வருகிறார். பாதுஷாவின் நண்பருக்கு தெரிந்த நபரான புது தில்லியைச் சேர்ந்த அஜயகுமார் மிஸ்ரா, வ/57, மும்பையைச் சேர்ந்த ரவிந்திர ராமச்சந்திர பக்சி மற்றும் கோகில் ஜெய்தீப்சி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, பாதுஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாங்கள் மும்பையைச் சேர்ந்த டாடா சன்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் நன்கொடை பிரிவில் பணிபுரிந்து வருவதாகவும், தங்களது ஜெரிசியா தொண்டு நிறுவனத்துக்கு தங்களது நிறுவனத்திலிருந்து ரூ.10 கோடி நன்கொடை பெற்றுத் தருவதாகவும், ஆனால் அதற்கு முன்தொகையாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினர். இதனை நம்பிய பாதுஷா கடந்த 21.12.2017 அன்று ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு, அண்ணாநகர் லு பிளாக், அண்ணாநகர் டவர் பூங்கா கேட் அருகே காரிலிருந்த மேற்படி நபர்களிடம் பணம் ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி அஜயகுமார் மிஸ்ரா மற்றும் நண்பர்கள் மீண்டும் பாதுஷாவை தொடர்பு கொண்டு, தங்களுக்கு மேற்படி 10 கோடி பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு செயல்படுத்தும் தொகையாக மேலும் ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில், பாதுஷா மீண்டும் நேற்று (22.12.2017) அன்று காலை அதே இடத்திற்கு சென்று அவர்களிடம் முறையிட்டதற்கு மேற்படி 3 நபர்கள் மற்றும் உடனிருந்த நபர்கள் சேர்ந்து, பாதுஷாவை கார் ஏற்றி கொன்று விடுவோம் என மிரட்டி காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
பாதுஷா இது குறித்து, மு-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், அஜயகுமார் மிஸ்ரா மற்றும் 2 நபர்கள் கூறியதுபோல, 3 பேரும் மும்பையிலுள்ள டாடா சன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்பதும், அவர்கள் பாதுஷாவை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு கூறியதும் தெரியவந்தது.
மேலும், மேற்படி தனிப்படையினர், குற்றவாளிகள் தப்பிச் சென்ற இன்னோவா காரின் கூசூ13 மு 1964 என்ற பதிவு எண்ணை வைத்தும் அவர்களது செல்போன் எண்ணை வைத்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் 1.அஜயகுமார் மிஸ்ரா, வ/57, த/பெ.பிரமானந்தம் மிஸ்ரா, சப்தர்சாங் என்கிலிண், புது தில்லி, 2.ரவீந்திர ராமச்சந்திர பக்சி, ஆ/வ.49, த/பெ.ராமச்சந்திர பக்சி, பானுகாந்த் காம்ப்ளக்ஸ், கொரிகாவு கிராமம், மும்பை, 3.கோகில் ஜெய்தீப்சி, ஆ/வ.22, த/பெ.நர்பத்சி, வலியா தாலுக்கா, பருச் மாவட்டம், குஜராத் மற்றும் இவர்களுக்கு சென்னையில் துணையாக இருந்த சினிமா துறையைச் சேர்ந்த தனியார் பாதுகாவலர்கள் 4.அருள்ராபின்சன், வ/40, த/பெ.ஆரோக்கியசாமி, எண்.4, ராமகிருஷ்ணன், நகர், 2வது தெரு, பாலமுருகன் நகர், போரூர், சென்னை-116, 5.ரகுநாதன், வ/37, த/பெ.தயானந்தன், உதயாநகர், போரூர், சென்னை-116, 6.மணிகண்டன், வ/27, த/பெ.பஞ்சாட்சரம், மருதேரி மெயின் ரோடு, சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், 7.ரமேஷ், வ/44, த/பெ.முனுசாமி, ஆரணி அஞ்சல், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய 7 பேரை இன்று (23.12.2017) காலை கைது செய்தனர்.
குற்றவாளிகளிடமிருந்து மோசடி செய்த பணத்தில் ரூ.9,80,000/-, மேற்படி இன்னோவா கார் மற்றும் போலியான வங்கி முத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான அஜயகுமார் மிஸ்ரா, ரவீந்திர ரமச்சந்திர பக்சி மற்றும் கோகில் ஜெய்தீப்சி ஆகியோர் இதுபோல பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் பணமோசடி செய்திருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.