Wednesday , October 24 2018
Home / Tamilnadu Police / துரைப்பாக்கம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது.

துரைப்பாக்கம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது.

சென்னை, மேட்டுக்குப்பம், ஓ.எம்.ஆர் ரோடு, எண்.3/442, என்ற முகவரியில்  தனம்மா, வ/33, த/பெ.ஷேசையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 06.09.2017 அன்று மேட்டுகுப்பம், அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் மேற்படி தனம்மா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக தனம்மா ஜெ-9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெ-9 துரைப்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை செய்து மேற்படி செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட  1.அந்தோணிராஜ் (எ) விஜி, பிளாட்பார்ம், கண்ணகி சிலை, மெரினா என்பரை நேற்று (18.09.2017) கைது செய்தனர்.  அவரிடமிருந்து 2 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்தோணிராஜ் (எ) விஜி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

சங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.

சென்னை, ரங்கா நகர் 4வது தெரு, எண்.65 என்ற முகவரியில் வசிக்கும் சுந்தரம், வ/55, த/பெ.பாண்டுரங்கன் என்பவர் பி.எஸ்.என்.எல் டெலிபோன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.