Thursday , September 27 2018
Home / District-News / தி இன்டஸ் சேலன்ஜ் புத்தக வெளியீட்டு விழா

தி இன்டஸ் சேலன்ஜ் புத்தக வெளியீட்டு விழா


L-R - Dr.R.Durgadoss, inspirational speaker and writer, Dr.SukhiSivam, philosophical orator & Mr.Ram Sankar, Author of Cholanomics launched the Book of The Indus Challenge in Chennai - Photograph
சென்னையில் இன்று எழுத்தாளர், திரு. துர்காதாஸ் அவர்கள் எழுதிய “தி இன்டஸ் சேலன்ஜ்” புத்தகம் வெளியிடப்பட்டது. தத்துவ மேதை, முனைவர். சுகி சிவம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகம் திரு. துர்காதாஸ் அவர்களின் 3வது வெளியீடு மட்டுமின்றி, இதற்கு முன் அவர் படைத்த தி ஷாக்கிள்ஸ் ஆஃப் வாரியர் புத்தகத்தின் இரண்டாம் பகுதியாகும். இப்புத்தகத்தை ரூபா பப்ளிக்கேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

தொழிலதிபரும் மேலான்மை ஆலோசகருமான திரு. துர்காதாஸ், இரண்டு வருடங்களுக்கு முன் தொடர்கதைகளை எழுத ஆரம்பித்தார். ஒவ்வொரு தொடர் கதையும் புராணங்களை அடிப்படையாக கொண்டதுடன் 10 புத்தகங்களை உள்ளடக்கியது. தொழிலதிபரும் மேலான்மை ஆலோசகருமான திரு. துர்காதாஸ், இரண்டு வருடங்களுக்கு முன் தொடர்கதைகளை எழுத ஆரம்பித்தார். ஒவ்வொரு தொடர் கதையும் புராணங்களை அடிப்படையாக கொண்டதுடன் 10 புத்தகங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு காலகட்டங்களை கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கு முன் அவர் படைத்த தி ஷாக்கிள்ஸ் ஆஃப் வாரியர் புத்தகம் மகாபாரத காலகட்டத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

எழுத்தாளர் துர்காதாஸ் நமது புராணங்களின் மீது அலாதி பிரியம் உடையவர் மட்டுமின்றி நமது புராணங்களில் பல்வேறு சுவையான கலவைகள் உள்ளன என்று கருதுகிறார்.

இப்புத்தகம் 3ம் நூற்றாண்டில் மாவீரர் அலெக்சான்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது நிகழ்ந்த சூழ்ச்சிகள், மர்மங்கள், வரலாற்று தொன்மவியல் ஆகியவற்றை மிகுந்த சுவையோடும், சிலிர்ப்பூட்டும் வகையிலும் படைத்திருக்கிறார். பாரத தேசத்தில் இங்குள்ள மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு கொண்டிருந்த ஒரு குழப்பமான சூழலில், மாவீரர் அலெக்சான்டர் இந்தியாவின் மீது படையெடுக்க தன் சேனைகளுடன் வருகிறார். இத்தகைய மாபெரும் சேனையை உடைய கிரேக்க அரசை, மிகப்பெரிய ராஜதந்திரியாகிய சாணக்கியரின் ஆலோசனையுடன் இளம் சந்திரகுப்த மவுரியா எதிர்த்து போரிடுகிறார். சந்திர குப்த மவுரியரின் நண்பரும் அவரது படை தளபதியுமாகிய ருத்ரா, இரகசிய மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு முத்திரையை கண்டுபிடிக்கிறார். இம்முத்திரை மகாபாரத காலத்தில் பயன்படுத்தபட்ட பெரும் பலம் கொண்ட ஆயுதமாகிய பிரம்மாஸ்திரத்தின் இரகசியங்களை கொண்டதாகும். ருத்ரா, தனது குருவின் வழிகாட்டுதலின் படியும், சக படைத்தலைவர்களின் துணையுடனும், இமயம் முதல் ராமேஸ்வரம் வரை பிரம்மாஸ்திரத்தின் இரகசியங்களை கண்டுபிடிக்க தனது தேடுதல் வேட்டையை தொடர்கிறார். அவர் பயணிக்கிற வழியில் தெய்வீக சக்தியுடைய சில சிரஞ்சீவிகளை சந்திக்கிறார், அவர்கள் மூலம் அவரது பிறப்பின் ரகசியத்தையும், அவருக்குள் மறைந்திருக்கக்கூடிய சக்தியையும் உணர்கிறார். உள்நாட்டிலேயே அவருக்கு எதிராக சதிகள் நடைபெறுவதும், அரசரை கொல்வதற்கு முயல்கிறார் என்கிற அவப்பெயரும் ஏற்படுகிறது. அவருக்கு எதிரான அனைத்து சதிகளையும் அவர் முறியடித்து அரச குடும்பத்தையும், நாட்டையும் ஒரு குழப்பமான சூழலில் இருந்து காக்க வேண்டிய கட்டயத்தில் இருக்கிறார். இத்தகைய பல சுவையான சம்பவங்களுடனும், பண்டைய இந்தியாவின் தொன்மையுடனும் இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது.

நண்பர்களால் டாக்டர் டிடீ என்று அழைக்கப்டும் டாக்டர் துர்காதாஸ் தற்போது துபாயில் வசித்து வருகிறார்., கடந்த முப்பாதாண்டுகளுக்கு மேலாக பல்வேறு பெரு நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்தவர் மட்டுமின்றி, மிக சிறந்த பேச்சாளர், மேலான்மை ஆலோசகர், தொழிலதிபராவார்.

About Ragavendhar

Check Also

“பொதுமக்கள் விஜிலஸ் கவுன்சில் தமிழ்நாடு 23 வது பொதுக்குழு கூட்டம்”

பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு 23வது பொதுக்குழு கூட்டம் சென்னை, புரசைவாக்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 9 அம்ச தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. இதில் …