Tuesday , January 15 2019
Home / Tamilnadu Police / திரு.வி.க நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது. 1500 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 840 குட்கா பாக்கெட்டுகள் மற்றும் ரூ. 22 ஆயிரம் பறிமுதல்.

திரு.வி.க நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது. 1500 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 840 குட்கா பாக்கெட்டுகள் மற்றும் ரூ. 22 ஆயிரம் பறிமுதல்.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக கே-9 திரு.வி.க நகர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (4.11.2017)  கொளத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வடக்கு மாட தெரு, எண்.27/8 என்ற முகவரியில் வீட்டை சோதனை செய்த போது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது  தெரியவந்தது.  அதன்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த 1.மாரிகண்ணன், வ/24, த/பெ.மாரிசன்,  வடக்கு மாடவீதி, கொளத்தூர்  2. மாரிபாண்டி, வ/21, த/பெ.சக்கரநாயக்கர், வடக்குமாடவீதி, கொளத்தூர் 3.பவன்ராஜ், வ/19, த/பெ.நாகராஜ், வடக்குமாடவீதி, கொளத்தூர் 4.சதீஷ், வ/50, சரோத்தமராவ், எண்.44, கே.சி.கார்டன், கொளத்தூர் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து  1500 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 840 குட்கா பாக்கெட்டுகள்  மற்றும் ரூ.22 ஆயிரம் பறிமுதல்  செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ரூ.1.25கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபர் கைது .

சென்னை-125, போரூர், மதனந்தபுரம், ராஜராஜேஸ்வரி நகர், நேதாஜி தெருவில் வசிக்கும், திரு.A.ஹரிகுமார், வ/46, த/பெ.தாமோதரன், என்பவருக்கு சொந்தமான சென்னை, போருர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.