Sunday , April 22 2018
Home / Occasions-The-Week / திரு மந்திரம் அருளிய திருமூலர் அவதார ஸ்தலத்தில் 8ம் ஆண்டு ஸம்வத்ஸராபிசேக விழா

திரு மந்திரம் அருளிய திருமூலர் அவதார ஸ்தலத்தில் 8ம் ஆண்டு ஸம்வத்ஸராபிசேக விழா

திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகில் உள்ள திருமந்திரம் அருளிய திருமூல சித்தர் அவதார தலமான
69 சாத்தனுார் கிராமத்தில் அமையபெற்றுள்ள திருமூலர் திருக்கோவில் 8ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நடைப்பெற்ற ஸம்வத்ஸராபிசேக விழா 30-3-2017 வியாழன் அன்று காலை 7-30 மணிக்கு தெடங்கியது இதில்
தருமை ஆதீனப் புலவர் முனைவர், மு.சிவசந்திரன் அவர்களின் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவும் பின்னர்
சிவாச்சாரியார்கள் தலைமையில் ஹோமமும் அதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு ஸம்வத்ஸராபிஷேகம் தூப தீப ஆராதனைகளும் அலங்காரமும் நடைப்பெற்றது

இவ்விழாவில் சிறப்பு வருகையாக சீர்வளர் சீர் திருவாவடுதுறை குரு மகா சன்னிதானம் , அவர்கள் , சீர்வளர் சீர் சூரியனார் கோவில் குருமகா சன்னிதானம் அவர்கள் ,திருவடி குடில் ஸ்வாமிகள் மற்றும் அன்னை கருனை இல்ல நிறுவனர் அம்பலவாணன் , மற்றும் பல சிறப்பு அருளாளர்கள் வந்திருந்து நடைபெற்ற விழாவினை சிறப்பித்து ஆன்மீக அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார்கள் மேலும் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு
அன்னதானம்வழங்கப்பட்டது.

மாலையில் சிறிய ரத வாகனத்தில் உற்சவ மூர்த்தி திருவீதி உலா மிக சிறப்பாக நடைப்பெற்றது இதில் ஆன்மீக அன்பர்கள் பலர் கலந்து கொணடார்கள்

இவ்விழா ஏற்பாட்டினை திருமூலர் திருமந்திரம் பெருமன்றம் பொறுப்பாளர்கள். Dr.மகாதேவன் மணி (எ) சந்திரசேகர் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்கள் கிராமவாசிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

About Ragavendhar

Check Also

Sri Vedantha Desikan 750th Thirunakshatra Mahotsavam.

Srirang­­­am Trichy,  January 2018, Sri Vedanta Desikan, the famous philosopher and Guru is one of …