Wednesday , June 20 2018
Home / Tamilnadu Police / திருவான்மியூர் காவல் நிலைய எல்லையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்.

திருவான்மியூர் காவல் நிலைய எல்லையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜெ-6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (15.10.2017) காலை சுமார் 09.30 மணியளவில்  கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், எல்.பி சாலை, பரணி  நகர் பகுதியில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு  ஒருவர் கஞ்சா பொட்டலங்களை ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சுப்பிரமணி (எ) மணி, வ/64, த/பெ.கணபதி, எண்.29, 25 வது பிளாக், ஏழில் நகர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட சுப்பிரமணி (எ) மணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *