Wednesday , June 20 2018
Home / Tamilnadu Police / திருவல்லிக்கேணியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை காரில் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது.

திருவல்லிக்கேணியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை காரில் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (21.12.2017) மதியம் சுமார் 2.30 மணியளவில் பல்லவன் சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த ஹுண்டாய் ஐ-20 காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பெருமளவில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் பேரில் காரில் புகையிலைப்பொருட்களை எடுத்து வந்த கார் ஓட்டுநர் வினோபாபு, வ/32, த/பெ.மாணிக்கம், எண்.150, எம்.டி.எச் சாலை, வில்லிவாக்கம் மற்றும் காரில் இருந்த புகையிலைப்பொருட்களை வாங்க வந்த சுரேஷ், வ/32, த/பெ. பொன்னுசாமி, எண்.59, எஸ்.எம் நகர், பல்லவன் சாலை, திருவல்லிக்கேணி ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் 5 மூட்டைகள், ரேமோ பாக்குகள் 5 மூட்டைகள், சுபாரி 5 பெட்டிகள் என மொத்தம் 100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் மற்றும் ஹுண்டாய் ஐ-20 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இக் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய செங்குன்றத்தை சேர்ந்த காரின் உரிமையாளர் ஸ்ரீதர் மற்றும் சதக் ஆகிய இருவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வினோபாபு, சுரேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *