Monday , January 21 2019
Home / District-News / திருவண்ணாமலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து  பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து  பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை ஜன. 26: அரசு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவொளி பூங்கா எதிரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எஸ்.நேரு தலைமை தாங்க, நகர தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் வி.கே.ஆர்.சீனுவாசன், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், ஆரணி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பைரோஸ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன் பாஜக பிரமுகர் எல்.சீனுவாசன் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிசார்பு நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”

கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா, திருவள்ளுர் தினம், தைபூசம்” என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.