Sunday , May 26 2019
Home / District-News / “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”!

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”!

சிறு வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டிக் டாக் (Tik Tok) என்ற மொபைல் அப்ளிகேஷன் (Mobile Application), கூகுள் ப்ளே ஸ்டோர் (Googlge Play Store) மற்றும் ஐ.ஓ.எஸ். (i.O.S) தளங்களில் மிக அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்படும் நிலையை மீண்டும் எட்டியுள்ளது. ‘இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்ற அறிவிப்போடு, களமிறங்கியுள்ள இது, தற்போது உலகில் மிக அதிக அளவில் வீடியோவைப் பரப்பும் செயலி என்ற பெயரை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதுவரை, இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யாதவர்களும் கூட, தற்போது இதை பதிவிறக்கம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

#ReturnofTikTok என்ற புதிய ஹேஷ்டேக் தொடங்கியதை ஒட்டி, இந்த டிக் டாக் செயலி  ஏற்கனவே உள்ள தனது 20 கோடி பயனாளர் என்ற எண்ணிக்கையைத் தாண்டி, கோலாகலமான மறுவரவைப் பதிவு செய்துள்ளது.  இந்த ஹேஷ்டேக்கில் இளைஞர்களைக் கவர புதியதொரு சவாலும் கொடுக்கப்பட்டுள்ளது.  தற்போதைய செயலி மூலம், இளைஞர்கள் கற்பனை கலந்த வீடியோக்களை புதுமையான  வகையில்  #Sharandwin என்பதன் மூலமாக அதிக அளவில் பகிர்ந்து கொண்டு, சவாலில் பங்கேற்கின்றனர்.       

தற்போதைய நிலையில் #ReturnofTikTok என்பது 50 கோடியே 40 லட்சம் பயனாளிகளால் பார்க்கப்பட்டு, மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த செயலி மூலம் தற்போது விடுக்கப்பட்டுள்ள சவாலில் வெல்பவர்களுக்கு, ஆச்சரியமுட்டும அன்றாடப் பரிசுகள் கிடைப்பதற்கான  வாய்ப்புகளும் உள்ளன.

டிக் டாக் செயலி குறித்த அண்மைய நடப்புகளை விளக்கிப் பேசிய இந்தியாவிற்கான (பொழுதுபோக்கு திட்டங்கள் மற்றும் ஒப்பத்தங்கள் பிரிவு) அந்நிறுவன மூத்த அதிகாரி திரு. சுமிதாஸ் ராஜகோபால், “இந்த தருணத்தில் எங்களுக்கு பேராதரவு அளித்து, அன்பையும் விசுவாசத்தையும் காட்டியுள்ள இந்தியாவின் 20 கோடி பயனாளிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

#ReturnofTikTokஐ மீண்டும் அறிமுகம் செய்தது – வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தொடர்ந்து கடன்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமான ஒரு செயலே. இந்த டிக்டாக் பயனாளர் குடும்பங்களுடன் எமது பயணம் நீண்ட நாட்கள் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். இனி வரும் நாட்களில் இந்த செயலியைப் பயன்படுத்துவோர், அதை பாதுகாப்புடன் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

எனவே, இனிமேலும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக ஆப்பிள் ஸ்டோர்ஸில் இருந்தோ…கூகுள் ப்ளே ஸ்டோர்ஸில் இருந்தோ இந்த டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

டிக் டாக் செயலி பற்றி.

சிறு வீடியோ பகிர்வில் உலகின் மிகப் பிரபலமான சாதனம் டிக் டாக் செயலி. பூமியின் பல்வேறு மூலை முடுக்குகளில் உள்ள திறமைசாலிகள் தங்களது கற்பனையைக் கலந்து உருவாக்கிய புதுமையான காட்சிகளும், வீடியோக்களும் இந்த செயலி மூலம் அன்றாடம் பகிரப்பட்டு வருகிறது. எல்லாரையும் படைப்பாளிகளாக்க இந்த செயலி உதவுகிறது. அவ்விதம் தாங்கள் உருவாக்கியவற்றை உலக மக்களோடு பகிர்ந்து கொள்ள தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது. இதற்கு பிஜிங், பெர்லின், ஜகார்த்தா, லண்டன், லாஸ் ஏஞ்சலிஸ், மாஸ்கோ, மும்பை, சியோல், ஷாங்காய், சிங்கப்பூர், டோக்கியோ உள்ளிட்ட ஏராளமான நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. 2018-ஆம் ஆண்டில் உலக அளவில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் டிக் டாக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு www.tiktok.comஎன்ற வலைதளத்தை அணுகவும்.        

About Admin

Check Also

Dreamy #Summer Decors & Fun engagements for Children

Beyond Shopping; #The Marina Mall Chennai the latest premium destination on OMR goes a step …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.