Saturday , November 18 2017
Home / Tamilnadu Police / திருமுல்லைவாயலில் போலி ஆவணங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு இடம் விற்பதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

திருமுல்லைவாயலில் போலி ஆவணங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு இடம் விற்பதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

சென்னை, அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், ராம் பாரதி தெரு, எண்.16 என்ற முகவரியில் குமார், வ/43, த/பெ.ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என கேட்டதன்பேரில், அம்பத்தூர் பாடியைச் சேர்ந்த பாபு, வ/52 மற்றும் மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த சுரேந்திரன், வ/46 ஆகியோர் குமாரை அணுகி, தங்களுக்கு சொந்தமாக திருமுல்லைவாயல், பாலாஜி நகரில் உள்ள சுமார் 4 1/2 கிரவுண்ட் நிலம் இருப்பதாகவும், 5 கோடி பெறுமானமுள்ள இடத்தை அவசர தேவைக்காக உங்களிடம் 3 ¾ கோடிக்கு தருவதாகவும் கூறினர். மேலும், அந்த இடத்திற்கான ஆவணங்களையும் குமாரிடம் காண்பித்துள்ளனர்.

அதன்பேரில், குமார் முன்பணமாக ரூ.50 லட்சத்தை பாபு மற்றும் சுரேந்தரனிடம் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னதுபோல, இருவரும் பத்திரப்பதிவிற்கு வராததால், சந்தேகமடைந்த குமார் இது குறித்து ட்டி-10 திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேற்படி புகார் மீது வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், பாபு மற்றும் சுரேந்திரன் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்தபோது, மேற்படி இடம் சென்னையைச் சேர்ந்த வள்ளியம்மை மற்றும் உலகம்மை ஆகியோருக்கு சொந்தமானது என்பதும், மேற்படி இடத்தை வள்ளியம்மை மற்றும் உலகம்மையின் வாரிசுகள் பாபு மற்றும் சுரேந்திரனுக்கு பொது அதிகாரம் செய்து கொடுத்தது போல போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

அதன்பேரில், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.50 லட்சம் முன்பணமாக பெற்று மோசடி செய்த பாபு, வ/52, த/பெ.ராமச்சந்திரன், எண்.16, பாரதியார் தெரு, சக்தி நகர், பாடி, சென்னை-53 மற்றும் சுரேந்திரன், வ/46, த/பெ. மல்லக்கருப்பன், எண்.14/1, பஜனை கோயில் தெரு, மண்ணூர்பேட்டை, சென்னை-50 ஆகிய 2 பேரை நேற்று (19.10.2017) கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்கள் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் 11 மாணவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *