Sunday , July 22 2018
Home / Tamilnadu Police / திருமங்கலம் பகுதியில் மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற குற்றவாளி கைது. 4 சவரன் தங்கச்சங்கிலி பறிமுதல்

திருமங்கலம் பகுதியில் மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற குற்றவாளி கைது. 4 சவரன் தங்கச்சங்கிலி பறிமுதல்

சென்னை, திருமங்கலம், என்.வி.என். நகர், எண்.525 என்ற முகவரியில் சாந்தம்மாள், பெ/வ.70, க/பெ.மகிமைதாஸ் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். சாந்தம்மாள் கடந்த 08.12.2017 அன்று காலை சுமார் 07.00 மணியளவில் திருமங்கலம், 15வது பிரதான சாலையில் ஆக்சிஸ் வங்கி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் சாந்தம்மாள் கழுத்திலிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து சாந்தம்மாள் ஏ-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேற்படி குற்றவாளியை விரைந்து பிடிக்க திருமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அப்பகுதியில் பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளியின் உருவத்தை வைத்து, குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், தனிப்படையினர் நேற்று (16.12.2017) பாடி, மேம்பாலம் கீழே கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு மேற்படி குற்றவாளியின் உருவத்தைப் போன்று சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவரை மேலும் விசாரணை செய்தபோது, பிடிபட்ட நபரின் பெயர் பாலு (எ) பூபாலன் என்பதும், மேற்படி சாந்தம்மாளின் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

அதன்பேரில், குற்றவாளி பாலு (எ) பூபாலன், வ/20, த/பெ.முருகன், எண்.49, ஊ.மு. மாணிக்கனார் தெரு, நாரவாரி குப்பம், செங்குன்றம், சென்னை-52 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 சவரன் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், குற்றவாளி பாலு (எ) பூபாலன் ஏற்கனவே அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையங்களில் செல்போன் மற்றும் சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட குற்றவாளி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *