Sunday , January 21 2018
Home / National-News / திருப்பதியில் பக்தர்கள் காத்திருப்பு அறையில் போன் வசதி

திருப்பதியில் பக்தர்கள் காத்திருப்பு அறையில் போன் வசதி

திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பதி கோவிலில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோடை விடுமுறையான மே மாதத்தில் மட்டும் 26 லட்சத்து 45 ஆயிரத்து, 425 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் பலமடங்கு அதிகரித்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். கூடுதலாக தினமும் 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

கோவிலுக்குள் தற்போது தள்ளு முள்ளு ஏற்படாத வகையில் வெள்ளிக்கதவு அருகே உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் தனித்தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2014 மே மாதம் முதல் கருடாழ்வார் சன்னதியில் இருந்து ஜெயபேரி விஜய பேரிவரை 3 வரிசைகளாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தரிசனத்துக்கு செல்லும்படி ஊழியர்கள் பக்தர்களைதள்ளி விடும் எந்த நிகழ்வும் நடக்க வில்லை. மேலும், ஒன்றாவது வைகுண்டம் அறையில்பக்தர்கள், நண்பர்கள், உறவினர்கள் கோவிலுக்குள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் போன் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி அனைத்து காத்திருக்கும் அறைகளிலும் விரைவில் அமல் படுத்தப்படும்.

மேலும் தரிசனத்துக்கு எவ்வளவு நேரம் ஆகும். தற்போது எந்த அறை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் அறிய டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட உள்ளது. கோடையில் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ரூ.300 டிக்கெட்டுகளும் குறைக்கப்பட்டது. தினமும் பக்தர்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

About Admin

Check Also

TLC highlights women’s issues with a brave, new format in THE POETIST

New Delhi / Chennai, December, 2017:TLC, India’s premier lifestyle channel, today announced the launch of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *