Friday , December 15 2017
Home / Tamilnadu Police / திருநின்றவூர் பகுதியில் பெண்ணை கேலி செய்த இரண்டு நபர்கள் கைது.

திருநின்றவூர் பகுதியில் பெண்ணை கேலி செய்த இரண்டு நபர்கள் கைது.

சென்னை, திருநின்றவூர், கொசவன்பாளையம், பஜனைகோயில் தெரு, எண்.270 என்ற முகவரியில் ரமணி வ/45, (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்பவர் தனியாக வசித்து வருகிறார். ரமணி கடந்த 29.11.2017 அன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாபு (எ) ஜெயக்குமார், சுரேஷ் ஆகிய இருவர் மேற்படி ரமணியை கேலி, கிண்டல் செய்து அவதூறாக பேசியுள்ளனர். இது குறித்து ரமணி டி-11 திருநின்றவூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

டி-11 திருநின்றவூர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்ததில் பாபு (எ) ஜெயக்குமார், சுரேஷ் ஆகிய இருவரும் ரமணியை கேலி, கிண்டல் செய்து அவதூறாக பேசியது உண்மையென தெரியவந்ததது. அதன் பேரில் 1. பாபு (எ) ஜெயக்குமார், வ/46, த/பெ.துருவாசன், எண்.1/69, பஜனை கோவில் தெரு, கொசவன்பாளையம், திருநின்றவூர் 2. சுரேஷ், வ/44, த/பெ.கஸ்தூரி, மெயின்ரோடு, கொசவன்பாளையம், திருநின்றவூர் ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *