Tuesday , October 17 2017
Home / State-News / திண்டுக்கல் மாவட்டம் ஊரகப்பகுதிகளில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – வனத்துறை அமைச்சர் தகவல்

திண்டுக்கல் மாவட்டம் ஊரகப்பகுதிகளில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – வனத்துறை அமைச்சர் தகவல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவார் டாக்டா;.டி.ஜி.வினய்,  முன்னிலையில், திண்டுக்கல் மாநகராட்சி குடிநீர்  விநியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்  மீண்வலத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்   வனத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவா; டாக்டர்.டி.ஜி.வினய்,  முன்னிலையில், திண்டுக்கல் மாநகராட்சி குடிநீர் விநியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்   வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. இதனால் நமது திண்டுக்கல் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் திட்டப்பணிகளுக்கு அதிகளவில் நிதிகளை வழங்குவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் நீர் நிலைகள் உள்ள இடங்களை கண்டறிந்து ஆழ்துளை குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள், அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக அனைத்துறை அலுவலர்கள் கூட்டம்  நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி தற்போது தண்ணீ திறந்து விடுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடும் நீர் தற்போது பாராமத்தி வேலூர் வரை வந்துள்ளதால், நமது திண்டுக்கல் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ், நீர் பெறப்படும் இடமான புதுப்பாளையம் என்ற இடத்திற்கு நீர்வர இன்னும் 8 கி.மீ. தூரம் உள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதற்கு  முதலமைச்சர்  சந்தித்து கோரிக்கை அளித்துள்ளேன். முதலமைச்சர் , சம்மந்தப்பட்ட அலுவலரிடம் இது தொடர்பாக அறிவுறுத்தியுள்ளார்கள். மேட்டூர் அணையிலிருந்து பெறப்படும் நீரானது நமது மாவட்டத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தற்காலிக தீர்வாக அமைந்துள்ளது.

(2)நீர்பற்றாக்குறையை போக்க இதுபோன்ற தற்காலிக தீர்வோடு, அலுவலர்கள் நிரந்தர தீர்வுகளையும் கண்டறிந்து அதற்குரிய திட்ட அறிக்கையினை தயார் செய்ய திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் நிலத்தடி நீர் மற்றும் கிணறுகள் உள்ள இடங்களை கண்டறிந்து, அதனை சீரமைத்தால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மேலும், குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு அதிக அளவில் லாரிகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீhர்விநியோகம் செய்வதற்கும் அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு குடிநீர் தேவைக்காக தேவையான நிதியினை வழங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 1,140 இடங்களில் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.3.34 கோடி மதிப்பிலும், மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில்  குடிநீர்திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகையாக ரூ.74 கோடி 14,900 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15,000 தென்னை விவசாயிகளுக்கு ரூ.9 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. மேலும், விடுபட்ட விவசாயிகள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தால், வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கென, அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வெ.ப.பா.பரமசிவம், மாநகராட்சி ஆணையாளர் திரு.மனோகர், முன்னாள் மாநகராட்சி மேயர் திரு.வி.மருதராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாகப் பொறியாளர் திரு.தங்கழகு, உதவி பொறியாளர் திரு.பிரபுராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கருப்பையா, மாநகராட்சி பொறியாளர் திரு.கணேஷன், முன்னாள் துணை மேயா; திரு.துளசிராம், ஆவின் பால்வளத்தலைவர் திரு.அ.திவான்பாட்ஷா, அபிராமி கூட்டுறவு சங்கத்தலைவர் திரு.வெ.பாரதிமுருகன், கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர் திரு.ஜெயசீலன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

கோவை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக

தந்தை பெரியார் அவர்களின் 139 பிறந்த நாளை முன்னிட்டு காந்திபுரம் திருவள்ளுர் பேருந்து நிலையம் உள்ள பெரியார் சிலைக்கு மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *