Tuesday , October 23 2018
Home / News / திண்டுக்கல் மாவட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட உலக காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் :

திண்டுக்கல் மாவட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட உலக காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் :

20170324_091219 20170324_104353திண்டுக்கல் மார்ச், திருத்தியமைக்கப்பட்ட உலக காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முதலாவதாக காலை 9.00 மணியளவில் டாக்டர் T.G.வினய் இ.ஆ.ப அவர்கள் காசநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.

அரசு மருத்துவமனையில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் காசநோய் குறித்து உரையாற்றினார். நமது மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு 23127 நபர்களுக்கு இலவசமாக சளி பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் 2383 நபர்களுக்கு காசநோய் கிருமி கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் DOTS முறைப்படி இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாத்திரைகளுக்கு கட்டுப்படாத காசநோய் Multi Drug Resistant (MDR TB) க்கான DOTS PLUS முறைப்படி தற்போது 45 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கடந்த வருடங்களில் 23 நோயாளிகள் DOTS PLUS முறைப்படியும், 2691 நோயாளிகள் DOTS முறைப்படியும் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர். மேலும் மருத்துவர்களுக்கு கட்டுப்படாத காசநோயை கண்டறிய அதிநவீன முறையான CBNAAT நமது மாவட்டத்தில் உள்ளதால், மாதத்திற்கு சுமார் 150 நபர்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஓர் நபர்க்கு பரிசோதிக்க செலவாகும் தொகை சுமார் ரூ.2500 இலவசமாக மக்கள் பயன்படுத்திக கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டார்.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை காலம் முழுவதும் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் அரசாங்காத்தால் வழங்கப்பட்டு வருகிறது. Bedaquiline என்ற புதிய மருந்துகள் ஜூலை 2016 முதல் மாவட்ட காசநோய் மையத்தில் முற்றிய காசநோயாலிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதுவரை 4 நோயாளிகள் Bedaquiline மாத்திரை மூலம் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் இந்திய அரசு ஆணைப்படி ஒவ்வொரு மருத்துவரும் தமது மருத்துவமனைகளில் கண்டறியப்படும் காசநோயாளிகள் பற்றிய தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றார். இவ்விழாவிற்கு மாவட்டம் காசநோய் அதிகாரி டாக்டர். இராமச்சந்திரன் MBBS.,DTCD., அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இணை இயக்குனர் டாக்டர் து.மாலதி பிரகாஷ் MBBS.,DEN.,முன்னிலை வகித்தார். மருத்துவ கல்லூரியில் அதிகாரிகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

About Ragavendhar

Check Also

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் …