Thursday , December 14 2017
Home / Occasions-The-Week / திண்டுகல் மாவட்டத்திற்கு வருகை தந்த சுவாமிகள் :

திண்டுகல் மாவட்டத்திற்கு வருகை தந்த சுவாமிகள் :

20170325_093537[1]

20170325_093528[1]
திண்டுக்கல் மார்ச் 25¸ திண்டுகலுக்கு வருகை தந்த ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ மஹா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் பழனி ரோட்டில் அமைந்துள்ள வி.கே.எஸ் மஹாலுக்கு வருகை தந்து அனைத்து வைபவகங்களிலும் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் அருள்புரிந்தார். சிருங்கேரி ஆச்சார்யாளிடம் மந்தர உபதேசம் பெற்ற பின்தான் ராமநாத ஸ்வாமிக்கு ப10ஜை செய்ய முடியும் என்பது காலம் காலமாக உள்ள சம்ப்ரதாயம்¸ நேபாள மள்ளரின் குலகுரு ஸ்ரீ சிருங்கேரி பீடாதிபதிகளே ஆவார்கள்.

வேத¸ சாஸ்த்ர பாடசாலைகள் ¸ வேத சம்மேளனங்கள் ¸ வேத சாஸ்த்ர விற்பன்னர்களைக் கௌரவித்தல்¸ வயது முதிர்ந்த வித்வான்களுக்கு மாதந்திர உதவித்தொகை¸ பகவத்கீதையை ஒப்புவிக்கும் யாவருக்கும் சன்மானம்¸ கிராமங்களை தத்தெடுத்து முன்னேற்றுதல்¸ தினசரி 10¸000 மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணாக்கர்கள்¸ சுற்றுலா பயணிகளுக்கு இலவச உணவு¸ கல்விக்கூடங்கள்¸ கலை¸ பொறியியல் கல்லுரிகள்¸ ஆயுர்வேத கல்லூரிகள்¸ சிறப்பு குழந்;தைகளுக்கான கல்வி நிலையங்கள்¸ அனாதை மற்றும் முதியோர் இல்லங்கள்¸ அதிநவீன மருத்துவமனை ஆகிய மகத்தான பணிகளை ஸ்ரீ சாரதா பீடத்தின் பொதுச்சேவையாக செய்து வருகிறது.

அனைத்து ஏற்பாடுகளையும் திண்டுக்கல் ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் தர்மாதிகாரி திரு.மோகன் சினிவாசன் அவர்கள் முன்னிலையில் செய்யப்படடுள்ளது.

About Ragavendhar

Check Also

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா இன்று தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்களில் முக்கியமானது பஞ்சப்பிரகார விழா. அக்னி நட்சத்திரத்தில் …