Monday , May 20 2019
Home / State-News / தமிழ்நாடு குறும்பர்- குருமன்ஸ் முன்னேற்றச் சங்கம் 3வது மாநில எழுச்சி மாநாடு

தமிழ்நாடு குறும்பர்- குருமன்ஸ் முன்னேற்றச் சங்கம் 3வது மாநில எழுச்சி மாநாடு

தமிழ்நாடு குறும்பர்- குருமன்ஸ் முன்னேற்றச் சங்கம் 3வது மாநில எழுச்சி மாநாடு

தமிழக அரசியலில் எங்கள் சமுதாயத்திற்கும் பங்களிப்பு வேண்டும் கோவையில் கூடிய குறும்பா் சமுதாய மக்கள்கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு குறும்பர் சமுதாய மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட குறும்பர் சமுதாயத்தினர் தங்களது குடும்பம் சகிதமாக பல்லாயிரக்கணக்கானோர் இந்த இன எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டிற்கு முன்னதாக கோவை ஜென்னீஸ் கிளப்பில், “செப்பேர்டு இண்டர்நேஷனல் ” துவக்க நிகழ்வில் சமுதாய முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல முக்கிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இதுபோக ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு மற்ற மாநிலங்களில் தங்களது சமுதாயத்திற்கு எந்த வகையில் அந்த மாநில அரசுகள் உதவி செய்து வருகிறது என்றும்,தங்களது சமுதாய மக்கள் அந்தந்த மாநில அரசுகளில் முக்கிய பங்களிப்பு ஆற்றி வருவதாகவும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் தமிழகத்தைப் பொறுத்த அளவில் சுமார் 20 மாவட்டங்களில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தங்களுடைய இனமான குறும்பர் சமுதாய மக்கள் உள்ளதாகவும், ஆனால் தமிழக அரசியலை பொருத்தளவில் தங்களுடைய இன மக்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை என்றும் அரசியல் பொறுப்புகளில் தங்களது இன மக்களை புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

எனவே வருங்காலங்களில் தமிழக அரசியலில் தங்களது இன மக்களுக்கு பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு குடும்ப முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாத், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் ரேவண்ணா, செப்பேர்டு இன்டர்நேஷனல் தமிழக பொறுப்பாளர் வழக்கறிஞர் வீரபத்திரய்யா, மாநில தலைவர் பாலாஜி தங்கவேல், கோவை மாவட்ட தலைவர் கோகுலகிருஷ்ணன், மாநில பொருளாளர் வழக்கறிஞர் சரவணன் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான குறும்பர் சமுதாய மக்கள் பங்கேற்றனர்.

 இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குறும்பர் சமுதாயத்தின் ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ நிரஞ்சனா நந்தபுரி மகா சுவாமிகள் கலந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து  சிறப்புறை ஆற்றினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.