Wednesday , January 16 2019
Home / District-News / தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு கோவையில் கோலாகலம்…

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு கோவையில் கோலாகலம்…

கோவை செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலை அருகில் பொங்கல் திரு விழாவையொட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கார் பவுண்டேஷன் சார்பில் “நம்ம கோவை ஜல்லிக்கட்டு” போட்டி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். அமைச்சர் எஸ். பி.வேலுமணி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்எல்ஏக்கள் பி.ஆர் ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை ஏ.சண்முகம், ஆர்.கனகராஜ், வால்பாறை கஸ்தூரி வாசு, ஓ.கே.சின்னராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி.ராஜசேகர், ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.எஸ்.திருமுகம், ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் வெங்கிட சுப்பிரமணி, டோனி சிங், மோகன் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.
இதில் கோவை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த 432 காளைகளும், 295 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவில் அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு மாருதி காரும், சிறந்த பிடுபடாத மாடாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்ற காளைமாட்டின் உரிமையாளரான பி.ராஜசேகரனுக்கு மாருதி காரும், 2-ம் பரிசு பெற்ற மாடுபிடி வீரரான மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த கோடி என்பவருக்கும், பிடுபடாத மாட்டின் உரிமையாளரான திருச்சி குணா என்பவருக்கும் மோட்டார் சைக்கிள்களையும் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வழங்கினார். ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, கை தட்டியும், விசில் அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

About Admin

Check Also

VR Chennai Announces The Inaugural Edition of The Madras Art Guild

Chennai, January 2019: VR Chennai is delighted to announce the inaugural edition of the Madras …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.