Tuesday , June 27 2017
Home / News / தமிழகத்தில் +2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் +2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம்

+2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சென்னை உட்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாணாக்கர்கள் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், 97.85 சதவீத தேர்ச்சியுடன்மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகித்து சிறப்பு பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் 96.77 சதவீதம் பெற்று 2-ம் இடத்திலும், ஈரோடு மாவட்டம் 96.69 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்திலும், தூத்துக்குடி மாவட்டம் 96.44 சதவீதம் பெற்று 4-வது இடத்திலும், நாமக்கல் மாவட்டம் 96.40 சதவீதம் தேர்ச்சி பெற்று 5-வது இடத்திலும் உள்ளன.

மிகக் குறைந்தபட்சமாக தேர்ச்சி பெற்றுள்ள மாவட்டங்களில் 84.99 சதவீதம் பெற்று வேலூர் மாவட்டமும், அதற்கு அடுத்ததாக 84.86 சதவீதம் பெற்று கடலூர் மாவட்டமும் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, மாநகராட்சிப் பள்ளிகளில் 90.06 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நகராட்சிப் பள்ளிகள் 87.20 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.56 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 86.87 சதவீதத்துடன் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பார்வைத்திறன் குன்றிய மாணவ, மாணவிகள், தேர்வு எழுதிய மாவட்டங்களில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நீலகிரி, திருப்பூர், தருமபுரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகியவை இடம்பிடித்துள்ளன. வாய்ப்பேச முடியாத மற்றும் காதுகேளாத மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி ஆகியவையும், ராமநாதபுரம், நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Ragavendhar

Check Also

Amway India partners with Samarthanam Trust for the disabled to set-up Braille-Audio Library in Chennai

Chennai, May, 2017 – Amway Indiain association with Samarthanam Trust for the Disabled have set …