Tuesday , October 23 2018
Home / Tamilnadu Police / தனது மகளுக்கு வரன் பார்க்க வருவது போல சென்று பணத்தை திருடிய நபர் கைது.
Illustration of a police station building on a white background

தனது மகளுக்கு வரன் பார்க்க வருவது போல சென்று பணத்தை திருடிய நபர் கைது.

சென்னை, மாதவரம், பொன்னியம்மன்மேடு, சாமி நகர், எண்.25 என்ற முகவரியில் வசித்து வரும் சுப்ரமணியன், வ/64, த/பெ.நடராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். சுப்ரமணியன் தனது மகனுக்கு வரன் பார்ப்பது தொடர்பாக செய்தித்தாளில் விளம்பரம் செய்திருந்தார். இது சம்மந்தமாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சந்தானகோபாலன், வ/54, என்பவர் கடந்த 13.12.2017 அன்று மேற்படி முகவரியில் சுப்ரமணியனை சந்தித்து, செய்தி தாளில் வந்த விளம்பரத்தை பார்த்து தங்களது மகனை பார்த்துவிட்டு செல்ல வந்ததாக கூறினார். அதன்பேரில், சுப்ரமணியன், சந்தானகோபாலனை வீட்டிற்குள் அழைத்து, உபசரித்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர் சந்தானகோபாலன் மதியம் உணவருந்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை சுப்ரமணியத்திடம் சொல்லிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.

சுப்ரமணியன் சில நாட்கள் கழித்து, தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணத்தை சரிபார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த பணம் ரூ.1.85 லட்சம் காணவில்லை. பல இடங்களில் தேடியும், பணம் கிடைக்காததால், சுப்ரமணியன் இது குறித்து ஆ-1 மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தீவிர விசாரணை செய்ததில், சுப்ரமணியன் வீட்டிற்கு வரன் பார்க்க வந்த சந்தானகோபாலன் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால், காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, சந்தானகோபாலனை பிடித்து விசாரணை செய்தபோது, சந்தானகோபாலன் சம்பவத்தன்று மதியம் சுப்ரமணியன் வீட்டில் அனைவரும் அசந்த நேரத்தில் பீரோவில் இருந்த பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதன்பேரில், மேற்படி குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தானகோபாலன், வ/54, த/பெ.சேஷாத்ரி, எண்.53, வடக்கு வளைஞ்சான் தெரு, ஸ்ரீரங்கம், திருச்சி என்பவரை நேற்று (26.12.2017) கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், குற்றவாளி, சந்தானகோபாலன், இதுபோல கரூர், ஈரோடு மற்றும் பல இடங்களில் வரன் பார்ப்பது போல சென்று பணம் மற்றும் நகைகளை திருடியது தெரியவந்தது.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.